செய்திகள்

இதுவரை 6 லட்சத்து 2 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

இதுவரை 6 லட்சத்து 2 ஆயிரம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

நேற்று 90,107 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, அக்.12-–

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இதுவரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 3 ஆயிரத்து 53 ஆண்கள், 1,962 பெண்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,250 பேரும், கோவையில் 389 பேரும், சேலத்தில் 294 பேரும், குறைந்தபட்சமாக தென்காசியில் 19 பேரும், பெரம்பலூரில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 505 ஆண்களும், 2 லட்சத்து 59 ஆயிரத்து 849 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 31 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 24 ஆயிரத்து 835 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 84 ஆயிரத்து 318 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 26 பேரும், தனியார் மருத்துவமனையில் 39 பேரும் என 65 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 10 ஆயிரத்து 252 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3,415 பேர் இறந்துள்ளனர்.

நேற்று 5 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேரும், கோவையில் 390 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும் அடங்குவர். இதுவரையில் 6 லட்சத்து 2 ஆயிரத்து 38 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 44 ஆயிரத்து 95 பேர் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 82,014 பேரும், செங்கல்பட்டில் 39,347 பேரும், கோவையில் 37,117 பேரும், திருவள்ளூரில் 34,741 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் 35 மாவட்டங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை சராசரியாக 4 ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் 191 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 83 லட்சத்து 22 ஆயிரத்து 832 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 90,107 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 80 லட்சத்து 84 ஆயிரத்து 587 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் நேற்று 88 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *