செய்திகள்

சென்னை பாரிமுனையில் 16 கிலோ வெள்ளி, 4 லட்சம் பணம் பறிமுதல்

சென்னை, மார்ச். 10–

சென்னை பாரிமுனையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 16 கிலோ வெள்ளி, ரூ. 4 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, பாரிமுனை, பூக்கடை ஈவினிங் பஜார் அருகே நேற்றிரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழி மடக்கி சோதனை செய்த போது காருக்குள் 16.5 கிலோ வெள்ளிக்கட்டிகள், ரூ. 4 லட்சம் ரொக்கம் இருந்தன. அதற்குறிய ஆவணங்களை கேட்ட போது அவர்களிடம் இல்லை. கணக்கில் வராததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விநாயகம் என்பவரிடம் பறக்கும்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *