செய்திகள்

6 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

Spread the love

சென்னை, நவ.16 –

சென்னயில் கடத்தப்பட்ட 6 1/2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி போலீசார் வாகன சோதனை செய்த கொண்டிருந்தபோது காட்டுப்பாக்கம் காமராஜ் (வயது 29), டிபி.சத்திரம் மணிகண்டன் (வயது 41) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் போனார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது. அதைப் பறிமுதல் செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல சல்லடாம்பேட்டையில் சந்தீப் (வயது 19), ஜோயல் (வயது 26 ) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 1 1/2 கிலோ கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *