செய்திகள் நாடும் நடப்பும்

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர பெண்களின் பங்களிப்பு அவசியம்


ஆர்.முத்துக்குமார்


தற்போது நாம் 3.1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருக்கிறோம். 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் அதாவது ரூ.3 கோடியே 90 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதே இந்தியாவின் இலக்கு’ என்று 2019-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உரக்க அறிவித்தார். இதை எட்டுவோமா?

சர்வதேச முதலீட்டாளர்களுடனான வலுவான கூட்டாண்மை இந்தியாவின் யுக்தியின் மிக முக்கியமான திட்டமாகும்,. முதலீட்டுக்கு உகந்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்கு வதற்கும் எங்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது” என்றும் மோடி கூறி இருந்தார்.

பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தின் CEBR, அறிக்கையின்படி, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் சராசரியாக 1 டிரில்லியன் டாலர்களை இந்தியா தனது பொருளாதாரத்தில் சேர்க்கலாம் 2035 ஆம் ஆண்டில் இந்தியா பத்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.

CEBR என்பது இங்கிலாந்தின் முன்னணி பொருளாதார ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் Pierre-Olivier Gourinchas, உலகம் மந்தநிலையின் உடனடி சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா ஒரு “பிரகாசமான நட்சத்திரமாக” இருப்பதாக பாராட்டியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் அதனுடைய முதல் டிரில்லியன் டாலரை 2007-ம் ஆண்டிலும் இரண்டாவது டிரில்லியன் டாலரை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டிலும் தொட்டது.

மூன்றாவது டிரில்லியனை எட்டாண்டுகள் கழித்து 2022-ம் ஆண்டில் தொட்டிருக்கிறது. பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகள் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மூன்றாவது டிரில்லியன் என்கிற மைல்கல்லை இந்தியா வெற்றிகரமாகக் கடந்திருக்கிறது.

ஐஎம்எப், கணிப்பின்படியும் இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரத்தை 2027-ம் ஆண்டில்தான் எட்டமுடியும் என கூறியுள்ளது.

இன்றைய நிலையில் இந்தியப் பொருளாதாரத்துக்கு வேளாண்துறையின் பங்கு சுமார் 400 பில்லியன் டாலராகும். இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் வேளாண்துறையின் பங்களிப்பு இப்போது இருக்கும் அளவைப் போல் இரண்டு மடங்காக உயர வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் முக்கிய மதிப்பு, பரிவர்த்தனைகள் மற்றும் நெட்வொர்க்கிங்கை எளிதாக்குவதன் மூலம் பொதுமக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ளது.

அதில் நமது சாதனைகள் உலக நாடுகள் அதிசயித்து பார்க்க வைத்து வருகிறது.பெண்கள் சரக்கு மற்றும் சேவைத் துறையிலும் அவர்களது வீட்டு வேலைகளிலும் குடும்பத்தலைவிகள் மற்றும் தாய்மார்கள் என பலரும் பல பணிகளையும் செய்கிறார்கள்.

சீனப் பெண்களின் வேலைப் பங்கேற்பு விகிதம் 60%, இது இந்தியாவின் எண்ணிக்கையை விடமூன்று மடங்கு அதிகம்.

சென்ற மாதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கவும் ஒருமனதாக ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது .

நாட்டிலுள்ள 656 மாவட்டங்களில் 84,400 க்கும் மேற்பட்ட வணிகங்கள் இயங்கி உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது. தொழில்முனைவோர் புதுமையான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கின்றனர்.

நாட்டிலுள்ள 656 மாவட்டங்களில் 84,400 க்கும் மேற்பட்ட வணிகங்கள் இயங்கி உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது.

தொழில்முனைவோர் புதுமையான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கின்றனர்.

இதில் மகளிரின் பங்கை அதிகரிக்க வைத்தாக வேண்டும்.

5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடைவதற்கு மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள், இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஒருபக்கம் என்றால் மிகப் பெரிய சவாலாக இருக்கும் இரு துறைகள் பற்றி பார்ப்போம்.

வேளாண்துறை: பயிர் இழப்பு, சந்தையுடனான தொடர்பு, பருவநிலை மாற்றம், உர விலை உயர்வு போன்ற சவால்களை வேளாண் துறை எதிர்கொண்டு வருகிறது. வேளாண் துறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியமான ஒன்றாகும்.

இந்தியப் பொருளாதாரத்துக்கு வேளாண்துறையின் பங்கு சுமார் 400 பில்லியன் டாலராகும், நாம் 5 டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் வேளாண்துறையின் பங்களிப்பு இப்போது இருக்கும் அளவைப் போல் இரண்டு மடங்காக உயர வேண்டும். அதற்கும் பெண்களின் பங்களிப்பு மிக அவசியமாகுகிறது.

பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டுமானால் பெண்கள் பெற வேண்டிய பயிற்சிகள் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் பயிற்சி, குறைந்த வட்டியில் கடன்களை எளிதாகப் பெறுதல் மற்றும் குழந்தைப் பேற்றை பெறுவதை எப்படி எப்போது எனத் தீர்மானிக்க உதவுதல் அவசியமாகுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *