செய்திகள்

5 தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

வாஷிங்டன், ஜூன் 3–

உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அவற்றின் பெயரும், அவை எந்த நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது என்பது குறித்த விவரங்கள் வருமாறு:–

பைசர் – அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அஸ்ட்ராஜெனகா (கோவிஷீல்ட்) – உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது. பிரிட்டன், மலேசியா, தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜான்சன் & ஜான்சன் – சிங்கிள் டோஸ் தடுப்பூசியான இது அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஐரோப்பா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாடர்னா – கனாடா, டென்மார்க், பின்லாந்து, ஜப்பான், போர்ச்சுக்கல், தைவான் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சினோபார்ம் – சீனா, பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இவை மட்டுமல்லாது ஸ்புட்னிக்-–வி, கோவாக்சின், சினோவேக் போன்ற தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பின் பரிசீலனையில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *