செய்திகள்

351 ராணுவ தளவாட பொருட்களின் இறக்குமதி: ராணுவ அமைச்சகம் தடை

டெல்லி, டிச.30–

உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், 351 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, ராணுவ அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பான ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், குறிப்பிட்ட ராணுவ தளவாடப் பொருட்கள் மீதான தடை, மூன்று ஆண்டுகள் முழுமையாக அமலில் இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 351 பொருட்களில் 172 பொருட்கள், அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட உள்ளது.

அன்னிய செலாவணி மிச்சம்

89 பொருட்கள் 2023ஆம் ஆண்டுக்குள்ளும் 90 பொருட்கள் 2024ஆம் ஆண்டுக்குள்ளும் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,000 கோடிக்கு மேல் அன்னிய செலாவணி, மிச்சமாகும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் முப்படைகளில் பயன்படுத்தப்படும், 2,500க்கும் அதிகமான ராணுவ தளவாடப் பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *