செய்திகள்

328 இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்

Spread the love

பூலுவப்பட்டி அகதிகள் குடியிருப்பில்

328 இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள்:

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்

 

கோவை, மே 18–

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாவட்டம் பூலுவப்பட்டியில் இலங்கை அகதிகள் குடியிருப்பு பகுதியில் (சிலோன் காலனியில்) இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்று கோயம்புத்தூர் மண்டலம் கொரோனா தொற்று இல்லாத பகுதிகளாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப் பட்ட ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய குடும்பங்களுக்கு உணவுப் பதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 8 லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 பொருட்கள் கொண்ட அத்தியாவிசிய மளிகை பொருட்கள் தொகுப்பும், 4 லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று பூலுவுப்பட்டி இலங்கை அகதிகள் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 328 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த இரன்டு வாரங்களுக்கு மேல் இல்லாத நிலையில், அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *