வாழ்வியல்

300 வகை நோய்கள் வராமல் தடுக்கும் முருங்கைக்கீரை


நல்வாழ்வுச் சிந்தனைகள் 


முருங்கைக் கீரை– 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும் 67 வகையான நோய்களைக் குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.

முருங்கைக் கீரையில் 90 வகையான சத்துகளும் 46 வகையான மருத்துவ குணமும் நிறைந்து இருப்பதாக ஆய்வுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

முருங்கைக்கீரை ஒரு மருத்துவ குணம்மிக்க மூலிகை. மற்ற கீரை வகைகளை விட அதிக அளவு புரதச்சத்தும் மற்ற சத்துகளும் முருங்கை கீரையில் நிறைந்துள்ளன.

முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மற்ற எந்தத் தாவர உணவிலும் முருங்கையில் இருப்பது போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் இல்லை.

மேலும் முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் உள்ள இரும்புச்சத்தை விட முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் உள்ளிழுத்துக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published.