செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு திடீர் துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள் பலி

ஸ்ரீநகர், பிப். 20–

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்றிரவு மூன்று இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கித் தாக்குதலில், 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் மாவட்டம் பட்காம் எனும் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது, திடீரென மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். பதிலுக்கு போலீசாரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த, 3 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிகள் பறிமுதல்

மேலும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே, ஜனிக்காம் எனும் பகுதியில் நடந்த மற்றொரு என்கவுண்டர் சம்பவத்தின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இதில் ஒரு காவலர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஸ்ரீநகரில் உள்ள பர்சுலா பகத் எனும் இடத்தில துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள், 2 போலீசாரை நோக்கி சுட்டு உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரண்டு போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு திடீரென பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *