செய்திகள்

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்

ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை, மார்ச்.6-–

தமிழக சட்டமன்ற தேர்தலில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் பாரதீய ஜனதாவே போட்டியிடுகிறது.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பாரதீய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பாரதீய ஜனதா மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் கையழுத்திட்ட 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் உடன்படிக்கையில் கூறியிருப்பதாவது:-

6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அண்ணா தி.மு.க.வும் – பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா தி.மு.க.விற்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 6-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு அண்ணா தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அந்த தேர்தல் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பா.ஜ.க.வுக்கு 20 தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *