செய்திகள்

20 ஆண்டுகளுக்கு பின் திருத்தணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு

திருத்தணி, ஜன. 25

திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 1998 -2000ஆம் ஆண்டுகளில் பிள்ஸ் 2 மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்து தங்களது பள்ளி பவருவ சம்பவங்களை பேசி நெகிழ்ச்சி அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1998- 2000ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த 250 மாணவர்கள் 20 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மலரும் நினைவுகள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பிரபு தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் வழக்கறிஞர் வி.பி.டில்லி, செங்குட்டவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி வரவேற்றார். நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் முன்னாள் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களது குடும்பத்துடன் பங்கேற்று முதல் முறையாக சந்தித்ததும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நெகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவர்களது ஆசிரியர்களை உற்சாகத்துடன் வரவேற்று கவுரவித்து மகிழ்ந்தனர்.

இதனை அடுத்து பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களுடன் தங்களது வகுப்பு அனுபவங்கள் பகிர்ந்துக் கொண்டனர். மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்புரை ஆற்றிய பெண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உதயசூரியன் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வி கற்று உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஒரு சாம்பிரதயமாக அமைந்து விடாமல் சமுதாயத்திற்கு, ஏழை எளிய மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் மீது மோகத்தை தவிர்த்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *