செய்திகள்

2 தமிழக நிறுவனங்களுக்கு தேசிய தொழில்நுட்ப விருது

டெல்லி, பிப். 23–

தமிழகத்தைச் சேர்ந்த 2 தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட 12 நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்கள் என 3 பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தேசிய தொழில்நுட்ப விருதுகளை வழங்க விண்ணப்பங்களைத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்கிறது. இந்த ஆண்டு 128 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை வெளியிட்ட அறிவிப்பில், “குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், சென்னையைச் சேர்ந்த எஸ்.வி.பி. லேசர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தேசிய தொழில்நுட்ப விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களோடு, நாடு முழுவதும் 12 நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனங்களின் சிறப்புகள்

எஸ்.வி.பி நிறுவனமானது, ஆட்டோகேம்2டி கேம் மென்பொருள், மற்றும் நகை, பர்னிச்சர் தயாரிப்பில் இந்நிறுவனத்தின் இயந்திர தொழில்நுட்பங்கள், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அல்ஹல் ஆர் நியூட்ரா பார்ம்ஸ் நிறுவனம், நுண் நீர் பாசிகளில் இருந்து டோகோச ஹெக்ஸெனோயிக் அமிலம் என்ற ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தை தயாரிக்கும் பசுமை தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இது இதய நோய் மற்றும் மூளை முடக்கு வாதத்தை தடுக்க கூடியது. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளையும் அதிகரிக்கிறது. இது அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *