செய்திகள்

2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி சாவு

காஞ்சீபுரம்,ஆக. 7–-

காஞ்சீபுரம் அருகே முசரவாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த விவேகானந்தனின் மகன் ஜெகத்பிரியன் வயது (9) (4ம் வகுப்பு), திருப்புட்குழி ரோட்டுத் தெருவை சேர்ந்த சோமுவின் மகன் சுதன் (11) (6-ம் வகுப்பு). இவர்கள் இருவரும் திருப்புட்குழி அருகே உள்ள ஒரு தாமரைக்குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்து நீரில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அச்சிறுவர்களின் உடல்களை மீட்டு காஞ்சீபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *