செய்திகள்

காங்கிரஸ் எம்எல்ஏ–க்கள் 170 பேர் 5 ஆண்டில் விலகல்

டெல்லி, மார்ச் 12–

கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசில் இருந்து 170 எம்.எல்.ஏ.க்கள் விலகி இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி ஒன்றாகும். இக்கட்சியில் தொடர்ச்சியாக பல எம்எல்ஏக்கள், அக்கட்சியிலிருந்து விலகி, வேறு கட்சிகளுக்கு செல்வது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், யார் யார் எந்த கட்சிக்கு சென்றனர் என்பது குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 2016 முதல் 2020-ம் ஆண்டுவரை 405 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள் ஆவர். பாரதீய ஜனதாவில் இருந்து 18 பேர் மட்டுமே வெளியேறி உள்ளனர் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

அந்தந்த கட்சிகளில் இருந்து வெளியேறிய மொத்தம் 405 எம்.எல்.ஏ.க்களில், 182 பேர் பாரதீய ஜனதாவிலும், 38 பேர் காங்கிரசிலும், 25 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலும் சேர்ந்தனர். மத்திய பிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணி மாறியதால் தான் எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *