செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 1.58 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, பிப்.3–

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 11 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 306 ஆண்கள், 204 பெண்கள் என மொத்தம் 510 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 142 பேரும், கோவையில் 54 பேரும், திருவள்ளூரில் 33 பேரும், குறைந்தபட்சமாக கடலூர், கள்ளக்குறிச்சி, தேனியில் தலா இருவரும், ராமநாதபுரத்தில் ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூரில் புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 352 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 274 ஆண்களும், 3 லட்சத்து 32 ஆயிரத்து 44 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 370 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 537 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் சென்னை, கன்னியாகுமரி, சிவகங்கை, தென்காசியில் தலா ஒருவரும் என 4 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 12,367 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 521 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 22 ஆயிரத்து 468 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 68 அரசு, 185 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 253 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை ஒரு கோடியே 58 லட்சத்து 11 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *