செய்திகள் வாழ்வியல்

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணம் செய்யும் மின்சார மொபட்

இந்திய ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு!

வெறும் 5 பைசா செலவில் ஒரு கிமீ பயணத்தை மேற்கொள்ளும் வகையிலான மின் வாகனங்களை ஐதராபாத் ஐஐடி மாணவர்கள் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐஐடி ஐதராபாத் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ப்யூர் எனர்ஜி நிறுவனம் ‘பியூர் இவி’ என்ற பெயரில் மின் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த பியூர் இவி நீடித்து உழைக்கும் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் இரண்டு சக்கர மின் வாகனங்களை இந்தியச் சாலைகளுக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த மின் வாகனங்களை தயார் செய்வதற்காக 18 ஆயிரம் 18,000 சதுர அடி பரப்பளவில், ஐதராபாத் ஐஐடி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மிக அதிகளவில் மின் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வைத்துதான் மோட்டார் சைக்கிள்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரிகளும் உருவாக்கப்பட உள்ளன.

எக்னைட், தி எட்ரன்ஸ், தி எப்லுடோ மற்றும் தி எட்ரோன் ஆகிய நான்கு மாடல்களைத்தான் அந்த நிறுவனம் முதலில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. முன்னதாக 10 ஆயிரம் யூனிட்களை தயாரித்து வெளியிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *