செய்திகள் நாடும் நடப்பும்

மாற்றம்தான் நிரந்தரம்: மகிழ்ச்சிப் பட்டியலில் முன்னேற வழி காண்போம்


‘வை–மை’ வரும் நல்ல தலைமை – பாகம் 5: ஆர். முத்துக்குமார்


வர இருக்கும் தேர்தலில் யார் ஜெயிப்பார்? அதிக இடங்களில் வென்று மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போகும் கட்சி எது? போன்ற கேள்விகளுக்கு நல்ல பதிலை ஜூன் 4 வாக்குகுள் எண்ணிக்கை நாளில் தெரிய வரும்.

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் முதல் ஆட்சியை அமைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியாகும்.

இந்த இரு வெவ்வேறு கட்சிகளின் கொள்கைகள் அந்தந்த கட்டத்தில் நாட்டின் வளர்ச்சிகளுக்கு உந்துதல் சக்தியாக இருந்தது.

அப்படி ஜனநாயக முறை தேர்தலில் ஒரு கட்சியே ஆட்சியை பிடிக்க முடியும். அவர்களில் தேர்வு பெற்ற ஒருவரைப் பிரதமராகவும் பதவி ஏற்கச்செய்ய முடியும்.

பல நல்லவர்கள், வல்லவர்கள், ஆட்சியை நடத்தும் நிபுணத்துவம் பெற்றவர் பலர் தோற்றுவிட அரசியலில் பயனற்று போய் விடுவது தான் கசப்பான உண்மை.

பெரும்பான்மையை வென்றவர் ஆட்சியைப் பிடித்து நல்லாட்சி வழங்குவார் என்று ஆசைப்படும் நாம் இனி வருங்காலத்தில் படித்த அறிவாளிகள், தொழில்நுட்ப வல்லமை பெற்றவர் என்று இருப்பவர்களின் பங்களிப்பும் நாட்டு வளர்ச்சி சமாச்சாரங்களில் விவாதிப்புகளில் அதிகாரப்பூர்வ ஆலோசனை தரும் நபராக இருக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

சென்ற நூற்றாண்டின் நடுவில் துவங்கிய நமது ஜனநாயக பயணத்தில் முக்கிய பிரச்சார சாதனம் வானொலி மட்டுமே!

70களுக்குப் பிறகே தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் பிரச்சார கருவிகளாக கிடைத்தது.

20ஆம் நூற்றாண்டின் துவக்கம் முதலே இன்டர்நெட் புரட்சியின் வருகையால் பல புதுப்புது பிரச்சார சமாச்சாரங்கள் உருவானது.

25% கடந்துவிட்ட இந்த 20ஆம் நூற்றாண்டின் விளிம்பில் ஒரு தலைவர் மேடையில் தோன்றாமல் அவரது மெய்நிகர் அதாவது Virtual image மேடையில் தோன்ற பிரச்சாரம் களை கட்டுகிறது.

அவரது உருவத்தை எதிர்க்கட்சியினர் கேலிக்குரிய வகையிலும் உபயோகித்து விடும் அபாயம் எழுந்துள்ளது.

நவீன மெய்நிகர் சமாச்சாரங்கள் பல பிரபலங்களுக்கு பெரும் தலைவலியாக மாறிக் கொண்டிருக்க மனித சமுதாயத்திற்கே சவால் மிகுந்த சிக்கலாக உருவாகி விட்டது.

சமூக வலைளதங்களில் ஒரு தலைவர் உண்மையில் பேசியதா? ஆழமான போலியா? அதாவது டிஜிட்டல் புரட்சியின் உச்ச தொழில்நுட்பங்கள் கொண்டு உருவான ஒருவரா?

ஆக உண்மை எது? போலி எது? என குழப்பும் தொலைத் தொடர்பு புரட்சி யுகத்தில் வானொலி கால சட்டத்திட்டங்கள், செயல்திட்ட வரைமுறைகள் மாற்றப்பட்டாக வேண்டும் அல்லவா?

அத்தகைய புது யுகப் புரட்சிக்கு அனுபவ முதிர்ச்சி கொண்ட தலைவருக்கு உரிய ஆலோசனைகள் தரும் இளம் புரட்சிப் படையும் அவசியம் தேவைப்படுகிறது.

அந்த புது யுக நயாகர்களால் இன்றயை அரசியல் கட்டமைப்பில் நுழைய முடியா தடைக் கற்கள் இருப்பது நமது ஜனநாயக வரையறையின் கட்டுப்பாடுகளால் உருவாகி இருக்கிறது.

ஒருவர் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளராக நின்று ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு தாவ வழி இருப்பதை அறிவோம்.

ஆனால் ஒரு நல்ல வேட்பாளர் என்று தெரிந்து அவருக்கு வாக்களித்து அவரே நான் வலதுசாரி அல்லது இடதுசாரி என அரசியல் சித்தாந்தத்தை பின்பற்ற வைக்கும் அதிகாரம் ஜனநாயக உரிமை வாக்காளருக்கும் இருந்தால் அது எப்படி இருக்கும்?

அதாவது கட்சி ரீதியாக ஒருவர் ஜெயித்தால் நல்லாட்சிக்கு உதவலாம்; ஆனால் நிபுணத்துவம் தொழில்நுட்ப வளர்ச்சிகளில் இருக்காது! ஆனால் கூடவே ஒருவர் அதே தொகுதியில் இருக்கும் அறிவார்ந்த ஒருவரையும் கூடவே வென்றவருக்கும் ஆலோசகராக செயல்பட மக்களே தேர்வு செய்தால் பல கட்டங்களில் நல்ல ஆலோசனைகள் வழங்கிட வழி பிறக்கலாம்!

இப்படிப்பட்ட புரட்சிக்கு வழி காண முதலில் வாக்காளர்கள் ஏதோ ஒரு விரக்தியுடன் வாக்களித்தால் அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிகளில் புதிய வேகம் இருக்காது!

ஆட்சிப் பொறுப்புக்கு ஒருவரை கட்சி ரீதியாக தேர்வு செய்ததுடன் நல்ல ஆலோசகர்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஆலோசனை தரும் தகுதியை பெற வைத்தால் ஆழமான போலி போன்று வரும் காலத்தில் நுண்ணறிவு அதாவது Artificial Intelligance சமாச்சாரங்கள் உருவாக்க இருக்கும் சமுதாய மாற்றங்கள் நாட்டின் மகிழ்ச்சியான வளர்ச்சிகளுக்கு உதவும்.

சென்ற மாதம் மார்ச் 20 சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் உலக நாடுகளில் மகிழ்ச்சியான நாடுகள் என்ற தர வரிசை பட்டியலும் வெளி வந்தது.

அதில் முதல் 3 இடங்களில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து இருக்கிறது. 5வது நாடு இஸ்ரேல்!

ஆம் பல்வேறு கலவரங்கள், ராணுவ தாக்குதல்கள் என பல சிக்கல்கள் கடந்த 25 ஆண்டுகளாக சந்தித்து வந்தாலும் அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கு குறைவின்றி இருப்பதை பார்க்கிறோம்.

முதல் 20 இடங்களில் இருந்த அமெரிக்கா 23வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

160% பண வீக்கத்தில் துவழ்ந்திருக்கும் அர்ஜன்டீனாவில் உள்ள மக்கள் மகிழ்ச்சிப் பட்டியலில் 49வது இடத்தில் இருக்கிறார்கள்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் தவித்துக் கொண்டிருக்கும் பாலஸ்தீனத்தில் உணவு பஞ்சமும் மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடும் அனாதை சிறுவர்களின் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே சென்றாலும் அவர்கள் மகிழ்ச்சிப் பட்டியலில் 103வது இடத்தில் இருக்கிறார்கள்.

ரத்த வெறி ஜாதி மத கலவரங்கள் அத்திப் பூத்தார்போல் அவ்வப்போது துளிர்விட்டு நமக்கு துயர் ஏற்படுத்தினாலும் நாடெங்கும் சுபிட்சத்திற்கும் வளங்களுக்கும் செல்வச் செழிப்புக்கும் எந்த பஞ்சமும் ஏற்பட்டதில்லை.

உணவுக்கு பாதுகாப்பும் அன்றாட வாழ்க்கைய்கு வழி தரப்பட்டு விட்டாலும் ஏனோ நம் தேசத்தில் மகிழ்ச்சி குறியீடு தரை மட்டத்தில் இருக்கிறது.

நாம் ஜனநாயக உரிமை பெற்று வீர நடைபோட்டு பொருளாதார புரட்சிகள் செய்து முன்னேறிய நாடாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் மகிழ்ச்சிப் பட்டியலில் 126வது இடத்தில் தொடர்ந்து இருப்பது வேதனைக்குரிய சமாச்சாரமாகும்.


மேலும் படிக்க:

தமிழகத்தில் தேர்தல் களம் தயார்: வை–மை தரும் நல்ல தலைமை பாகம் –1

உலகமே பாராட்டும் தேர்தல் கட்டுமானம்: வை–மை தரும் நல்ல தலைமை பாகம் –2

தேர்தல் விதிமுறைகள் பின்பற்றலில் அலட்சியம் ஏன்?: வை – மை வரும் நல்ல தலைமை… பாகம்–3

ஜனநாயகம் தலைநிமிர்ந்து பயணிக்க உங்கள் ஓட்டு யாருக்கு? : வை–மை வரும் நல்ல தலைமை – பாகம் 4


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *