சிறுகதை

மெடிக்கல் இன்சூரன்ஸ் – ராஜா செல்லமுத்து

மாறனுக்கு அன்று எரிச்சல் எரிச்சலாக வந்தது.

யார் இவங்களுக்கு என்னோட நம்பரைக் குடுத்தது? காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வேலை செய்யவிடாம பேசிக்கிடே இருக்கிறாங்க. அதுவும் மெடிக்கல் இன்சூரன்ஸ் போடணும் ,மெடிக்கல் இன்சூரன்ஸ் போடணும் அப்படின்னு தான் அத்தனை பேரும் நமக்கு போன் பண்றான். எனக்கு ஒன்னும் இல்லன்னு யாருகிட்ட சொன்னாலும் எதுவும் கேட்கிறதில்லை. இவங்க பேசுனதுக்கு அப்புறம் நமக்கு ஏதோ ஒன்னு வந்துருமோன்னு பயமா இருக்கு என்று வந்திருக்கும் போன் கால்களை எல்லாம் பேசி விட்டு நொந்து கொண்டான் மாறன்.

அவன் நொந்து கொண்டதை அருகில் இருந்து பார்த்த சசி “என்ன மாறா ஒனக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் போடச் சொல்லி டார்ச்சர் பண்றாங்களா ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சசி.

ஆமா என்னப்பா ஒரே டார்ச்சரா இருக்கு. எப்பப் பாத்தாலும் வேலை செய்ய விட மாட்டேங்குறானுக மெடிக்கல் பாலிசி போடுங்கன்னு ஒரே புடுங்கலா இருக்கு . மெடிக்கல் பாலிசி பாேடுங்கன்னு ஆம்பளையும் பொம்பளையும் நம்மள டார்ச்சர் பண்றானுங்க. எப்படி உன்னோட நம்பர் கிடைச்சது? என்று மாறன் சொல்ல

டெலிகாலர்ஸ் அப்படின்னு ஒன்னு இருக்குது. அங்க இருந்து நம்ம நம்பரை எல்லாம் வாங்கிட்டு தான் இப்படி பேசிட்டு இருக்காங்க .இது அவங்களுக்கு ஒரு டார்கெட் இத்தனை பேர் கிட்ட பேசுனோம்னு.

இதுல நல்லதும் இருக்குது. கெட்டதும் இருக்குது. ஆனா இவனுக தொல்லை தான் தாங்க முடியல என்று சசி சொல்ல

இல்ல சசி நாம ஏதாவது வேலை பார்த்துட்டு இருப்பாேம். அப்பத்தான் இந்த கால்ஸ் வரும். உண்மையாலுமே நம்ம மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்னு நினைச்சிருந்தாக் கூட ஆளாளுக்கு பேசி நம்மள எந்தப் பக்கமுமே போக விடாம பண்ணிடறானுங்க. காரணம் ஒருத்தவங்க அப்பத்தான் பேசி முடிச்சிருப்பாேம்.அடுத்து ஒருத்தன் பேசுவான்.

சரி நம்ம ஒரு பாலிசி எடுக்கலாம்னு நினைச்சுட்டு இருப்பாேம். இன்னொருத்தன் வந்து

சார் என்கிட்ட போடுங்க அப்படின்னு சொல்லுவான். இன்னொரு பொண்ணு பேசும் என்கிட்ட போடுங்கன்னு சொல்லும். அப்படின்னா நாம எத்தனை பேர் நம்ம பாலிசி போடுறது? இது ரொம்ப பிரச்சினையா இருக்குதுன்னு இந்த போன் கால்ஸ நாம பிளாக் பண்ணி வச்சாலும் ஏதாவது ஒரு நம்பர்ல இருந்து வந்து நம்ம டார்ச்சர் பண்றானுங்க என்ன பண்றதுன்னு தெரியல? என்று நொந்து போய் சொன்னான் மாறன் எனக்கும் கூட அப்படித்தான் இருக்குது மாறன்

இவங்கள என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்

என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே

ஒரு போன் கால் வந்தது.

சார் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி போடுங்க சார் . உங்களுக்கும் உங்ககுடும்பத்துக்கும் ரொம்ப நல்லது என்று எதிர் திசையில் இருந்து ஒரு பெண் பேசினாள்.

நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையாம்மா? நான் நல்லாத்தானே இருக்கேன் . எனக்கு எதுக்குமா மெடிக்கல் பாலிசி ? என்று மாறன் சொல்ல

சார் மனுசனுக்கு எப்ப எதுவானாலும் நடக்கலாம் சார். நீங்க போடுங்க . அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

என்று எதிரில் சென்ற பெண் சொல்ல

ஏம்மா.. ஏன் இப்படி அபசகுனமா பேசுற? உனக்கு பாலிசி வேணும்ங்கிறதுக்காக நான் நோயாளியாகணுமா ?

என்று கோபப்பட்டு சொன்னான் மாறன், ோ

சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த போனை கட் செய்து விட்டான்.

சில நாட்கள் கழிந்தன. உண்மையாகவே மாறனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்

சார் நல்லா தானே இருந்தீங்க. ஏன் இப்படி திடீர்னு ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கீங்க? என்று மருத்துவமனையில் இருந்த மருத்துவ நண்பர்கள் கேட்க

நான் நல்லாதாங்க இருந்தேன். மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி போடுங்கன்னு பல பேரு பேசிப்பேசியே என்னைய இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டானுங்க . அவனுங்களுக்கு பாலிசி போட்டமோ இல்லையோ என்னை நோயாளியாகிட்டானுவ என்று நொந்து போய் சொன்னான் மாறன்.

அப்போது அவன் போன் ரிங்க் ஆனது.

ஹலோ என்றான் மாறன்

சார் உங்க பேர் மாறன் தானே ? என்றான் போனின் எதிர் முனையில் இருந்தவன்.

ஆமா என்றான் மாறன்

சார் ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் போடுங்க சார். உங்க எதிர்காலத்துக்கு நல்லது என்று ஒருவன் சொல்ல

அடே உன்னத்தாண்டா தேடிக்கிட்டு இருக்கேன். வாடா வா… உன்னை என்ன பண்றேன்னு பாரு என்று மாறன் பாேட்ட சத்தத்தில் அதிர்ந்து போன போனில் வந்தவன்

இணைப்பைத் துண்டித்து விட்டு ஓடியே போனான்.

அந்த மருத்துவமனையில் படுத்திருந்த நோயாளிகளும் கூட பயந்து எழுந்து உட்கார்ந்தனர்.

மாறனும்தான் பயம் தெளிந்து எழுந்தான். அவனைப் படுக்கவைத்த மனநோயும் நோயும் பறந்தோடிவிட்டது .

வெட்டியாக துரத்தும் சுயநலமிகளை எதிர்த்து நின்றால் வெற்றி நமக்குத்தான் என்று நினைத்தபடியே வீர நடைபோட்டான்.

அதன்பிறகு மாறன் போனுக்குள் சுயநலமிகள் எவனும் வரவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *