செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, அக்.25-–

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கவேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்துத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கே.பனீந்திர ரெட்டிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா காரணமாக 2020-–ம் ஆண்டு போனஸ் குறைக்கப்பட்டது. 2021–-ம் ஆண்டும் அதே போனஸ் வழங்கப்பட்டது. அரசு மற்றும் நிர்வாகத்தின் நலன் கருதி தொழிலாளர்கள் 10 சதவீதம் போனஸை பெற்றுக்கொண்டனர்.

ஆனால், அதே 10 சதவீதம்தான் 2022–-ம் ஆண்டும் வழங்கப்பட்டது. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து 2023–-ம் ஆண்டுக்கான போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டுகிறோம். போனஸ் கணக்கிடும்போது குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையிலான சம்பளத்தை கணக்கீட்டிற்கான தொகையாக கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *