செய்திகள்

தேர்தலை முன்னிட்டு பயணிகள் ரெயில் கட்டணம் குறைப்பு

சென்னை, பிப். 27–

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில்களின் கட்டணம், 4 ஆண்டுகள் கழித்து தேர்தல் நேரத்தில் குறைக்கப்பட்டு இருக்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் முழுவதும் கொரோனா முதல் அலை பரவி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த வேளையில், ஒன்றிய மோடி அரசு கொரோனா பேரிடர் நேரத்தில் ரெயில் கட்டணத்தை உயர்த்தியது. ஆதாவது பயணிகள் ரயில்களை சிறப்பு விரைவு ரயில்கள் என்று பெயரை மாற்றிய பாஜக அரசு, சிறப்பு விரைவு ரெயில்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக கொரோனா பொருளாதார இழப்புகளில் இருந்த பயணிகள், கூடுதல் கட்டணத்தை செலுத்தி பயணிகள் ரெயில்களில் பயணித்து வந்தனர்.

தேர்தலால் குறைந்த கட்டணம்

கொரோனா தொற்றுக்காலத்தில் பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்ட நிலையில், கொரோனா தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பயணிகள் ரெயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் 3 ஆண்டுகளில் குறைக்கவே இல்லை. இது தொடர்பாக பொதுமக்கள், ரெயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள் தொழிற்சங்கங்கள் கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.

ஆனால், மத்திய அரசும் ரயில்வேயும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் சிறப்பு விரைவு ரெயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தையே பாசஞ்சர் ரயில்களிலும் வசூலித்து வந்தது. இந்த நிலையில் தற்போது ரெயில்வே நிர்வாகம் பயணிகள் ரெயில்களில் பழைய கட்டணத்தை வசூலிக்க இருப்பதாக அறிவித்து யுடிஎஸ் செயலியிலும் அதை நடைமுறைப்படுத்தி உள்ளது.

4 ஆண்டுகளாக கடுமையாக உயர்த்தி வசூலித்து வந்த ரெயில் கட்டணத்தை, தேர்தல் வருவதையொட்டி பாஜக அரசு குறைத்துள்ளதாக பயணிகள் விமர்சித்தாலும், இப்போதாவது குறைக்கப்பட்டுள்ளதே என்று பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி ரயிலில் செல்லும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் வர்த்தகர்கள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *