செய்திகள் வாழ்வியல்

கையை நீட்டி மோதிரம் காட்டி பேமன்ட் செய்யும் புதிய ஸ்மார்ட் ரிங் அறிமுகம்


அறிவியல் அறிவோம்


போனும் கார்டும் வேண்டாம்; கையை நீட்டி மோதிரம் காட்டி பேமன்ட் செய்ய வசதியான அதிநவீன புதிய ஸ்மார்ட் மோதிரத்தை செவன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது

போட் மற்றும் நாய்ஸ் பிரான்டுகளை தொடர்ந்து செவன் எனும் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட் ரிங் கான்டாக்ட்லெஸ் பேமன்ட் செய்யும் வசதியை வழங்குகிறது.

செவன் நிறுவனத்தின் புதிய 7 ரிங்-ஐ மெல்ல தட்டினாலே பேமண்ட் செய்ய முடியும். இந்த ஸ்மார்ட் ரிங் அதிநவீன என்.எஃப்.சி. (NFC) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் இதில் டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில், இந்த ஸ்மார்ட் ரிங் ஏழுவித அளவுகளில் கிடைக்கிறது.

ஸ்மார்ட் ரிங் சார்ந்த அம்சங்களை இயக்குவதற்காக பிரத்யேக செயலி (ஆப்) ஒன்றும் வழங்கப்படுகிறது. இது பரிமாற்றங்களை பாதுகாப்பாகவும் மிகவும் எளிமையாகவும் மாற்றுகிறது.

பயன்படுத்துவது எப்படி?

புதிய 7 ரிங் என்.எஃப்.சி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச பேமன்ட் வழிமுறைகளில் பணப்பரிமாற்றம் செய்கிறது. இதற்காக முதலில் ஸ்மார்ட் ரிங்-ஐ செட்டப் செய்ய வேண்டும். பிறகு அதை பயன்படுத்த, பயனரின் வங்கி கணக்கில் இருந்து கணிசமான தொகையை அதில் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரீபெயிட் வாலெட்டில் சேர்க்கப்பட்ட தொகையை, முதற்கட்ட வெரிஃபிகேஷன் நிறைவுற்ற பிறகு செலவு செய்ய முடியும். ஆனாலும் இதற்கான வரம்பு மாதத்திற்கு ரூ. 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் ரிங் மூலம் பணம் செலுத்துவதற்கு பேமன்ட் இயந்திரத்தின் அருகில் ரிங் அணிந்திருக்கும் கையை கொண்டுவர வேண்டும். இவ்வாறு செய்யும் போது பாதுகாப்பிற்காக கைவிரல்களை மூடியிருக்க வேண்டும். கைவிரல் நீண்டிருந்தால் பணம் அனுப்ப முடியாது. பேமன்ட் இயந்திரம் ரிங்குக்கு சக்தியூட்டும். இதனால் அதனை சார்ஜ் செய்ய வேண்டாம். மேலும் இது ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை.

இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டு இந்தியாவில் உள்ள யு.பி.ஐ. (UPI) மூலம் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். இது ஆன்லைன் பேமன்ட் மற்றும் இந்தியாவுக்கு வெளியில் பேமன்ட் சேவைகளை சப்போர்ட் செய்யாது.

செவன் நிறுவனம் தனது புதிய 7 ஸ்மார்ட் ரிங் விலையை ரூ. 7 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து இருக்கிறது. அறிமுக சலுகையாக பயனர்கள் இதனை ரூ. 4 ஆயிரத்து 777 விலையிலேயே வாங்கிட முடியும். 7 ரிங் வேலிடிட்டி 55 மாதங்கள் ஆகும். இதற்கான வாரண்டி ஒரு வருடம் ஆகும். ஏற்கனவே 7 ரிங் வைத்திருக்கும் பயனர்கள் வழங்கும் இன்வைட் மூலமாக இதனை வாங்கிட முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *