செய்திகள் முழு தகவல்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்


– ஆர் கிருஷ்ணமூர்த்தி


இன்று உலக ஆட்டிசம் தினம்.

மன இறுக்கம் கொண்டவர்களின் வளர்ச்சிக் கோளாறுகள் மற்றும் நரம்பியல் வளர்ச்சி வேறுபாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதாவது ஆட்டிசம் பற்றிய சரியான புரிதல்களை மக்களுக்கு ஏற்படுத்தவே ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி ஆட்டிசம் விழிப்புஉணர்வு நாளாக கடைப்பிடிக்கப் படுகிறது. ஒரு குழந்தை 2 வயதை அடையும் நேரத்தில் ஒரு குழந்தை மருத்துவர் அக்குழந்தைக்கு மேற்கொள்ளும் ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதல் பொதுவாக மிகவும் நம்பகமானதாக இருக்கும், குழந்தையின் 6 மாதத்திலிருந்தே நடத்தை அறிகுறிகளை கூர்மையாகக் கவனிக்கலாம். மன இறுக்கம் போன்ற வளர்ச்சிக் கோளாறுகளுக்கான ஸ்கிரீனிங் என்பது நவீன மருத்துவத்தில் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் வளர்ச்சித் திரையிடலின் பொதுவான பகுதியாகும். .ஆட்டிசம் அனைத்து இன, மற்றும் சமூக பொருளாதார குழுக்களிலும் ஒரே மாதிரியான விகிதத்தில் ஏற்படுகிறது. ஆட்டிசம் குறைபாட்டுக்கான காரணம் இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் பலரின் பார்வையில் மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்றில்… மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும் கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம் என்பதுதான். வளர்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் மரபு வழியாகவும் கூட ஆட்டிசம் பாதிப்பு ஏற்படலாம் என்றும் மற்றோரு பார்வை. ஒவ்வொருவருக்குமான காரணங்கள் மாறுபடும் என்பதால் . ஆட்டிசத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்படவில்லை.

உலக ஆட்டிசம் தினத்தின் வரலாறு

ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய பொது அசெம்பிளி அனைத்து நாடுகளிடையேயும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் முன்னுரிமை அளிக்கிறது. நரம்பியல், உடல் குறைபாடுகள் அல்லது மன இறுக்கம் போன்ற வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் சம உரிமைகளை இந்த அசெம்பிளி அமைப்பு முன்னிலைப்படுத்துகிறது. இதனால்தான் ஐ.நா. உலக ஆட்டிசம் தினத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது.

2007 இல், ஐக்கிய நாடுகள் சபையின் தேசிய பொதுச் சபை ஏப்ரல் 2 ஆம் நாளை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தது, மேலும் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்தது. 2008 ஆம் ஆண்டில், “மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள்” பற்றிய மாநாடு, ஒவ்வொரு மனிதனின் முழு மற்றும் சம உரிமைகளை உறுதி செய்வதற்கும் உலகளாவிய மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாகுபாடு அல்லது வன்முறையால் பாதிக்கப்படுபவர்களைப் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்டது. இந்த மாநாடு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட நரம்பியல் வளர்ச்சி பாதிப்பு கண்டிருக்கும் நபர்களைப் பாதுகாக்கிறது.

சரி. நமது ஆதரவை எப்படியெல்லாம் காண்பிக்கலாம் ?

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் உள்ளவர்களை நாம் ஆதரிக்கிறோம்; அக்கறை காட்டுகிறோம் என்பதைக் குறிப்பிடுவதற்கான ஒரு வழி நீல நிறம் தொடர்பான ஆடை அணிகலன்களை அணிவது. இது நீல நிற ரிப்பனாகவோ, நீல நிற ஆடையாகவோ அல்லது ஆட்டிசம் ஸ்பீக்ஸ் போன்ற இலாப நோக்கற்ற நிறுவனத்திடமிருந்து நீங்கள் வாங்கக்கூடிய சிறப்பு நீல சட்டையாகவோ இருக்கலாம். ஹேஷ்டேக்குகளில் ஒன்றின் மூலம் செல்ஃபியைப் பகிரவும் சமூக ஊடகங்களில் தொண்டு நிகழ்வுகள் அல்லது கல்வி நிகழ்வுகள் பற்றிய தகவலைப் பரப்பவும் என்று பல ஆதரவு திரட்டல்களுக்கான வழிகள் உள்ளன.

ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களை ஆதரிக்கும் நம்மில் பலரும் இது தொடர்பான விழிப்புணர்வைக் காட்ட நமது குடும்பத்தினர். நண்பர்கள் அல்லது சக பணியாளர்கள் ஆகியோருக்கு காட்ட, சிறப்பு நீல விளக்குகளைப் பெறலாம். இந்த பல்புகள் ஹோம் டிப்போக்களில் கிடைக்கிறது. மன இறுக்கம் என்றால் என்ன மற்றும் ஸ்பெக்ட்ரமில் உள்ளவர்களை எவ்வாறு ஆதரிப்பது என்பது பற்றி மேலும் கல்வியறிவு பெற உதவும் நிகழ்வுகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கல் என்று விழிப்புணர்வுகள் மேற்கொள்ள இப்படி நிறைய வழிகள் உள்ளன.

“ஆட்டிசம் தொடர்புடைய குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர் அக்குழந்தைகள் மீது கொண்டிருக்கும் கவனம் மிகவும் மெல்லியதானது. சீரிய கவனம், பொறுமை, வழிகாட்டித்துவம் பெற்றோர்களுக்கு மிக அவசியம். உதாரணமாக அக்குழந்தைக்கு பெயிண்டிங் வரைய பிடிக்குமா என்பதைக் கண்டறிவதற்கே சில நாட்கள் பிடிக்கலாம். இல்லையேல் வயலெண்டாக அவர்கள் தங்கள் தன்மையைக் காட்டலாம். பின்னர் இந்தக் கலரில் வரைந்தால் அதற்குப் பிடிக்கும் என்பதை பரிசோதிக்க வேண்டும். ஓரிரு மணி நேரத்தில் கண்டு தெளியப்படும் புராஸஸ் அல்ல இது. நமக்குத் தெரியுமோ தெரியாதோ? பல முன்னணி நடிகர்களின் மிகைப்பட்ட நடிப்பு ஆட்டிசம் போலவே தெரியலாம். ஆடியன்ஸ் விரும்பும் யுக்தியைத்தானே நடிகர்களும் பின்பற்றுவர்.வன்முறைக்கு காட்சிகள் போன்றவை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பார்வையில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். யாரவது ஒருவர் நம் வீட்டுக்கு வருகிறார் என்று முன்னரேயே குழந்தைக்குத் தெரியப்படுத்தினால் குழந்தை அந்த நிகழ்வை விரும்பலாம். அப்போது குழந்தை முகத்தில் கொண்டிருக்கும் பூரிப்பைச் சொல்லி மாளாது” என்கிறார் உளவியல் அறிஞர் காந்தலட்சுமி சந்திரமௌலி அவர்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *