சினிமா போஸ்டர் செய்தி

ஹாலிவுட் தரத்தில் மிரட்டியிருக்கும் பிரம்மாண்டம் 2.O: ஷங்கர் தி கிரேட்

ஷங்கர், ரஜினி, அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், நீரவ் ஷா ஃபைவ்மென் ஆர்மி

‘‘இதுவரை இப்படி வந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை’’  குதூகலிக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்குகள்

 

 

‘ஷங்கர் தி கிரேட்…. ஷங்கர் தி கிரேட்’ என்று சொல்லிக் கொண்டு தான் தியேட்டரை விட்டு வெளி வரவழைத்திருக்கிறார் ஷங்கர். படம் 2.O.(3D)

இதுநாள் வரைக்கும் ஹாலிவுட்டுக்கு இணையாக ஒரு தமிழ்ப்படம் என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஹாலிவுட்டே பிரமிக்கும் ஒரு படம் என்று மார்தட்டி சொல்ல வைத்திருக்கிறார் ஷங்கர்.

‘பைவ் மென் ஆர்மி’ என்று ஆங்கிலத்தில் ஒரு பிரேஸ் வரும், அது மாதிரி இந்திய படவுலகையே மிரட்டியிருக்கும்‘பைவ் மென் ஆர்மி’ – ஐந்து அசகாய சூரர்கள் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் அக்ஷய்குமார், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான், பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர் ‘3டி’ நீரவ் ஷா.

‘செல்போன்’ தான் படத்தின் மையக்கரு. செல்போன் டவர்களால் அழிந்து போகும் பறவை இனத்துக்கு வக்காலத்து வாங்கும் அக்ஷகுமார் (தீய சக்தி). அவருக்கும், அவரால் அழிவுக்குள்ளாக இருக்கும் பேராபத்திலிருந்து மனித குலத்தைப் பாதுகாக்க புறப்படும் டாக்டர் வசீகரனின் ரோபோ சிட்டிக்கும் இடையில் நடக்கும் தர்ம யுத்தம் தான் கதையின் மையம் 2.O சித்திரம்.

பிரம்மாண்டம், மிகப் பிரம்மாண்டம், மிகமிகப் பிரம்மாண்டம் என்று அடுக்கிக் கொண்டே போகும் விதத்தில் மிரட்டியிருக்கும் ஷங்கரின் பிரம்மாண்டம் தான் 2.O

போட்டிப் போட்டுக் கொண்டு பார்க்காவிட்டால் மண்டையே வெடித்துவிடும் ரஜினி ரசிகர்களுக்கு.

குழந்தை குட்டிகளோடு தியேட்டருக்குள் நுழையாவிட்டால் சண்டையே வெடித்து விடும். சாமான்யன் குடும்பத்திற்கு.

Must See Film அவசியம் அவசியம் பார்த்தே ஆக வேண்டிய படம் 2.O.

‘3டி’ கண்ணாடி அணிந்து ஒவ்வொரு பிரமேிலும் சிலிர்த்து நிற்கிறோம். என்னமாய்… என்னமாய்… ஒரு படம் என்று வியந்தே நிற்கிறோம்.

2.O. படம்: மக்கள் குரல் டிவியில் விமர்சனத்துக்கு www.makkalkural.tvஐப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *