செய்திகள்

ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் லாபம் ரூ.253 கோடியாக அதிகரிப்பு

சென்னை ஜூலை 31

சென்னையை சேர்ந்த ரூ. 1 லட்சம் கோடி சொத்து நிர்வகிக்கும் ஸ்ரீராம் குரூப் நிறுவனமான ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை) நிர்வகிக்கும் மொத்த தொகை ரூ.30 ஆயிரத்து 352 கோடியாக 4.5% உயர்ந்தது. இது ரூ.6 ஆயிரத்து 275 கோடிக்கு கடன் வழங்கி உள்ளது. கடன் வழங்க செலவு 15% அளவு குறைந்துள்ளது, இதன் நிகர லாபம் 10% அதிகமாக ரூ. 253 கோடியாக உயர்ந்தது என்றார் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஒய்.எஸ்.சக்கரவர்த்தி,

ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது, முதல் காலாண்டில் பொதுவாக வளர்ச்சி சிறிதாக இருக்கும். 2ம் காலாண்டில் இது உயரும். தொடர்ந்து இது நிர்வகிக்கும் சொத்து தரம் உயர்ந்து வருகிறது, நிதி திரட்டுவதில், வழங்குவதில் திறமையாக செயல்படுகிறது என்றும் ஒய்.எஸ். சக்கரவர்த்தி தெரிவித்தார்.

இந்நிறுவனம் சிறு தொழில், வாகனம், வீட்டு வசதி கடன் வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. தங்க நகை அடகு கடனும் வழங்குகிறது. தனிநபர் கடனும் வழங்குகிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *