செய்திகள்

ஸ்மார்ட்போன் திரை வழியாக கொரோனா பரிசோதனை

லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

லண்டன், ஜூன் 26–

ஸ்மார்ட்போன் திரையில் இருந்து எடுக்கப்படக் கூடிய மாதிரிகளை பயன்படுத்தி, குறைந்த விலையில் துல்லியமாக செய்யக்கூடிய புதிய கொரோனா வைரஸ் பரிசோதனை முறையை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு உருவாக்கியுள்ள இந்த முறையில், ஸ்மார்ட்போன் திரையில் நேரடியாக ஸ்வேப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். வழக்கமான, பி.சி.ஆர் நாசி ஸ்வேப் சோதனையில் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்கள், இந்த சோதனையின் போதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘போஸ்ட்’ பரிசோதனை

இங்கிலாந்து ஆய்வாளர்கள் இதை ‘போஸ்ட் என்று குறிப்பிடுகின்றனர். “Phone Screen Testing–PoST”. இதன்மூலம் 81 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகவும், இது ஆன்டிஜென் பக்கவாட்டு ஓட்ட சோதனைகளைப் போலவே துல்லியமானது என்றும் கூறப்படுகிறது.

‘போஸ்ட்’ பரிசோதனை நடைமுறைக்கு வந்தால், இந்தியா போன்ற குறைந்தளவில் வருமானமீட்டும் மக்கள் பெருமளவில் வாழும் நாடுகளில் வெளியிடுவதற்கு ஏற்றதாக அமையும்.

தவிர, தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மூலம் ஏற்படும் அசவுகரியங்களை நீக்கவும் இது வழிவகிக்கிறது. மேலும், பொதுமக்களிடையே பரிசோதனை எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தையும் இது அதிகரிக்கும் என்று லண்டன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *