செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம்

டெல்லி, ஏப்.14–

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனதாக விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் விமானம் கடந்த 2018-2019ஆம் ஆண்டு காலத்தில் அடுத்தடுத்து இரண்டு வான் விபத்துக்களைச் சந்தித்தது. இரண்டு விபத்துகளிலும் சேர்த்து 8 விமான பணியாளர்கள் உள்ளிட்ட 219 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலகளவில் போயிங் – 737 ரக விமானங்களை இயக்க சீனா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடை விதித்தன.

இந்நிலையில், விமானத்தை தரையிறக்கப் பயன்படும் Maneuvering Characteristics Augmentation System (MCAS) மென்பொருளில் உள்ள சில குறைபாடுகள் விபத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டு சில மாற்றங்களை அந்நிறுவனம் செய்தது. மேலும் இந்த ரக விமானங்களை இயக்க முறையான சிமுலேட்டர் பயிற்சியையும் விமானிகளுக்கு அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விமானங்கள் மீதான தடை நீக்கப்படுவதாக விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் அறிவித்தார்.

90 பைலட்கள் நீக்கம்

இந்தியாவில், 13 போயிங் மேக்ஸ் விமானத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இயக்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டுச் சென்ற போயிங் மேக்ஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட இன்ஜின் கோளாறு காரணமாக மீண்டும் மும்பைக்குத் திரும்பி அனுப்பப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானிகளில் 90 பேர் போயிங் 737 விமானத்தை இயக்க போதிய பயிற்சி பெறாமல் அந்த வகை விமானங்களை இயக்கி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 90 பைலட்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறையின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.