செய்திகள்

ஸ்பெயினில் 28 ந்தேதி நேட்டோ கூட்டம்: ஜப்பான் பிரதமர் பங்கேற்பு

டோக்யோ, ஜூன் 16–

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா, மாட்ரிட்டில் இந்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் ஜூன் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் நேட்டோ கூட்டமானது, 30 வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் நட்பு நாடுகளுக்கு நெருக்கடியான தருணத்தில் கூட்டப்படுகிறது என்பதால் மிக முக்கிய வாய்ந்த கூட்டமாகக் கருதப்படுகிறது.

நேட்டோவில் சேர விண்ணப்பித்த ஸ்வீடன் மற்றும் பின்லாந்து, இந்த உச்சி மாநாட்டுக்கு அந்த நாடுகளின் பிரதிநிதிகளை அனுப்புகின்றன. மேலும் தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி யூன் சுக்-யோல் தனது நாட்டிலிருந்து கலந்து கொள்கிறார். இவர் தென்கொரியவிலிருந்து நேட்டோவில் கலந்துகொள்ளும் முதல் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

உறுப்பினர் அல்ல

அமெரிக்கா நாட்டுடன் ஒரு நல்ல உறவை பேணும் ஜப்பான், நேட்டோ உறுப்பினர் அல்ல. ஆனால் அமெரிக்காவுடன் இணைந்து உக்ரைனுக்கு போருக்கு உதவியாக ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதித்துள்ளது. மேலும் அட்லாண்டிக் கடல் கடந்த கூட்டணியின் உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்கும் ஜப்பான் நாட்டின் முதல் தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

அண்மை வாரங்களில், ஜப்பான் பிரதமர் கிஷிடா, குவாட் குழுமத்தின் உச்சி மாநாட்டைத் தொகுத்து வழங்கியதுடன் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டார். அங்கு கடந்த வெள்ளிக்கிழமை ஷங்ரி-லா உச்சி மாநாட்டில் பாதுகாப்பு குறித்து முக்கிய உரையை நிகழ்த்தினார். அப்போது, “இன்று உக்ரைன், நாளை கிழக்கு ஆசியாவாக கூட இருக்கலாம் என்ற வலுவான உணர்வு எனக்குள் உள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.