வாழ்வியல்

வெள்ளை கருவைக்கொண்டு முகப்பரு போக்கும் முறை–2

மஞ்சள், ஆரஞ்சு ஜூஸ், வெள்ளைக்கரு

இந்த ‘மாஸ்க்’ பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கும். அதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

வெள்ளைக்கரு, தேன், பட்டை

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேன், 2 முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் 1/2 தேக்கரண்டி பட்டைத் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ முகப்பரு மறைந்துவிடும்.

முல்தானி மெட்டி, வெள்ளைக்கரு

முல்தானி மெட்டி தோலின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, பருக்களையும் போக்க உதவும். அதற்கு முல்தானி மெட்டியுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலரச் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெள்ளைக்கரு, ‘ரோஸ் வாட்டர்’

முட்டையின் வெள்ளைக்கருவில் சிறிது ‘ரோஸ் வாட்டர்’ சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்களுடன், சருமத் துளைகளில் உள்ள தூசிகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

பப்பாளி, எலுமிச்சை சாறு, வெள்ளைக்கரு

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால், பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் தோலின் இருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்டு, தோலின் நிறமும் மேம்படும்.

சந்தனப்பொடி, வெள்ளைக்கரு

சந்தனப்பொடியுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து களிம்பு செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நீங்கி, தோலின் பொலிவு மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *