செய்திகள்

‘வெண்ணிலா கபடிக்குழு’ புகழ் நடிகர் மாயி சுந்தர் மரணம்

தஞ்சை, டிச.24–

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 50.

இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *