சிறுகதை

வீட்டிலிருந்து வேலை (work From home) – ராஜா செல்லமுத்து

பெருந்தொற்று நோய் பரவிய காலத்தில் இருந்து தற்போது வரை இயல்பை தொலைத்து இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த பூமிப் பந்து.

இதனால் ஒர்க் பிரம் ஹோம் என்று முதலில் வேலை செய்தவர்கள் இப்போதும் அதையே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதில் சில சவுரியங்கள் உண்டு; சில அசெளகரியங்கள் உண்டு.

அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு சென்றால் குளிக்க வேண்டும்; டிப்டாப் உடையை அணிந்து செல்ல வேண்டும்; சுத்தமாக இருக்க வேண்டும்; மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து பணி செய்ய வேண்டும்.

ஆனால் ஒர்க் பிரம் ஹாேம் என்பது வீட்டில் அமர்ந்தபடியே பல் துலக்காமல், குளிக்காமல் கூட வேலை செய்துவிட்டு அதுக்கப்புறம் தன் கடமையை செய்து கொள்ளலாம். இது சௌகரியம். ஆனால் அசவுகரியம் என்பது மனிதனை சோம்பலாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

சில நன்மைகள் இருந்தாலும் பல தீமைகள் தென்படுகின்றன .

கணவன் மனைவி என்று இருக்கும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் இருந்து வேலை செய்யும் கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருவர் ஓய்வாக இருந்தால் அது தேவையற்ற சச்சரவுகளுக்கும் தேவையற்ற உரசல்களுக்கும் தேவையற்ற ஊடலுக்கும் கூடலுக்கும் வழி வகுத்து விடுகின்றன.

இதனால் சில நேரங்களில் சண்டைகள் முற்றும் ‘சில வீடுகளில் ஏற்கனவே இருந்த சண்டைகள் முடிவுக்கு வந்துவிடும்.

வேலை செய்யும் போது வீட்டில் இருக்கும்; பல சில சிக்கல்களைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு வேலை செய்வதால் அந்த வேலைகள் சரியாக வராது. குடும்பம் பிரச்சனை என்று அத்தனையும் தெரிந்து கொண்டு பணி செய்யும்போது அந்தப் பணி முழுமை அடையாமல் தாெக்கி நிற்கும்.காரணம் அலுவலகத்திற்கு சென்று விட்டால் அதனுடைய இட அமைப்பு மன அமைதி இன்னொரு உலகத்திற்கு கொண்டு சென்று விடும்

பால்ராஜ் இந்த சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டு சிதறினான். வொர்க் பிரம் ஹோம் என்ற வார்த்தை முதலில் இனித்தது. வரவர அவனுக்கு கசந்து போனதால் அந்த வார்த்தையை கேட்டாலே அவனுக்குள் என்னவோ போல இருந்தது.

எப்போது அலுவலகம் செல்வோம் என்று எண்ணிக் கொண்டிருந்தான் பால்ராஜ்.

ஒருநாள் அலுவலக மேலாளருக்கு போன் செய்தான்.

சார் என்னால வீட்ல இருந்து வேலை செய்ய முடியல. நான் ஆபீஸ் வரட்டுமா ? என்று கேட்டான்.

அவனவன் வீட்டில் இருந்து வேலை செஞ்சாத் தான் நல்லது அப்படின்னு சொல்றாங்க. நீங்க வீட்ல இருந்தே வேலை செய்யுங்கைன்னு சொல்றோம். நீங்க வேண்டாம்னு சொல்றீங்களே என்று பால்ராஜ் கடிந்து கொண்டார் மேலாளர்

இல்லை சார் என்னால வீட்ல இருந்து வேலை பார்க்க முடியாது; பல பிரச்சினைகளும் தொந்தரவுகளும் வந்துகிட்டு இருக்கு. பிளீஸ் நான் ஆபீஸ் வரேனே என்று முறையிட்டான் பால்ராஜ்.

ஓ.கே ஐ திங்க் அண்ட் கால் யூ என்று பால்ராஜுக்கு பதில் சொன்னார் அந்த நிறுவனம் மேலாளர்.

அதனால் அலுவலக வேலையைத் தவிர மற்ற வேலைகள் செய்பவர்கள் மூளையில் ஏறாது; ஆனால் ஒர்க் பிரம் ஹோம் என்பது அப்படி இல்லை; பால்காரன் , தண்ணீர்காரன், தபால்காரன் என்று அத்தனை காரன்களையும் பார்த்து விட்டுத் தான் வேலை செய்ய வேண்டும்.

இதனால் இதில் நெகிழ்ச்சி மகிழ்ச்சியை விட துன்பங்கள் அதிகம் தென்படும்.

புதிதாக திருமணமான தம்பதிகள் இருந்தால் அவர்கள் ஒர்க் பிரம் ஹோம் என்ற வேலையை செய்யாமல் வேறு வேலையை செய்து கொண்டு இனப் பெருக்கத்தை அதிகரிப்பார்கள்.

அதனால் பால்ராஜ் தன்னுடைய ஒர்க் பிரம் ஹோம் என்ற வேலையை இத்தோடு முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும்; இல்லையென்றால் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் என்று அவன் பணி செய்யும் மேலிடத்தில் சாென்னான்.

இல்ல சார் எனக்கு ஒர்க் பிரம் ஹோம் புடிக்கல .பல சிக்கல்கள் பிரச்சினைகள் துன்பங்கள் துயரங்கள் வெட்கங்கள் வேதனைகள் பரிகாசங்கள் எல்லாம் என்னை வந்து சேருது ; என்னால வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது .நஷ்டமோ லாபமோ? நெட்டையோ குட்டையோ? நான் அலுவலகத்திற்கே வர்றேன் என்று மேலாளர் இடம் கேட்டான் பால்ராஜ்.

சரி நாளைக்கு இருந்து நீங்க ஆபீசுக்கு வாங்க என்று அனுமதி அளித்தார் மேலாளர்.

சந்தாேசமாய் அலுவலகம் போய்வரத் துவங்கினான் பால்ராஜ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *