செய்திகள்

வீடுவீடாகச் சென்று கொரோனா தொற்று கண்டறியும் பணி: 2 லட்சம் வீடுகளில் 7 லட்சம் பேரிடம் ஆய்வு

சென்னை, ஏப்.1–

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின்கீழ் வீடுவீடாகச் சென்று கண்டறியும் பணியில் இதுவரை 2 லட்சம் வீடுகளில் 7 லட்சம் நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன், தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 31–ந்தேதி வரை ராணிப்பேட்டை, தஞ்சாவூர், வேலூர், கோயம்புத்தூர், விருதுநகர், செங்கல்பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், கரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில், 3,698 களப் பணியாளர்கள் வாயிலாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 815 வீடுகளில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *