வாழ்வியல்

விவசாயிகள் லாபகரமாக இருக்க செய்ய வேண்டியது!

மனிதனுக்கு தினம் பல் துலக்குவது, மாதம் ஒரு முறை முடி வெட்டுவது, நகம் வெட்டுவது, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது, 6 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு சாப்பிடுவது, (மாத்திரை) தினமும் காலையில் 1 லி தண்ணீர் குடிப்பது, ½ மணி நேர உடலுக்கு உறுதி வர பயிற்சி, தியானம் என தொடர்ந்து செய்கிறோம்.

ஆனால் விவசாயிகள் தங்கள் நிலத்தில் அதிக மகசூல் கிடைக்க மண், நீர் இரண்டும் எவ்வளவு முக்கியம் என அறிந்து செயல்படுவதில்லை. எனவே தான் இன்று விவசாயம் லாபகரமாக இல்லை.

விவசாயிகள் செய்ய வேண்டிய (20) கட்டாய பணிகள்/கடமைகள்…

1) நீர், மண் இரண்டையும் பல்கலைக்கழகத்தில் கொடுத்து, சோதனை (ஆய்வு) செய்து முழு அறிக்கை பெற வேண்டும்.

2) என்ன பயிரிடப் போகிறீர்கள் என முடிவு செய்து அதிகாரிகளிடம் ‘ஆய்வு அறிக்கையை’ காட்டி, என்ன உரம் போடலாம், சொட்டு நீர் பாசன அமைப்பு போடலாமா? என ஆலோசனைக் கேட்க வேண்டும்.

3) மண்ணில் உள்ள சத்து குறைபாடுகளை அறிந்து, அதற்கேற்ற மண், உரம், இயற்கை உரம் இவற்றைத் தேவையான அளவு போட்டு வளப்படுத்தி, பின் நன்கு உழுது பயிரிட வேண்டும்.

4) ஒரே பயிரை தொடர்ந்து போடக் கூடாது.

5) மண்ணின் காரத்தன்மை அளவை அறிந்து, அதற்கேற்றபடி சுண்ணாம்பு/சிப்சம் இட வேண்டும்.

6) கட்டாயம் சில ஆடுகள், மாடுகள், கோழிகள் வளர்த்து, அதன் மூலம் பஞ்ச காவியா, மூலிகை பூச்சி விரட்டி, மண் புழு உரம் தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

7) நீரின் தன்மையறிந்து விவசாயத்திற்கு ஏற்றபடி நீரை மாற்ற வேண்டும் (சிறு இயந்திரங்கள்/பில்டர் மூலம் நீரை பாசனத்திற்கு ஏற்றபடி மாற்றலாம்).

8) சொட்டு நீர்ப்பாசனம் சிறந்தது.

9) வசதி இருப்பின் அரசு உதவியுடன் பசுமைக் குடில் அமைக்கலாம்.

10) ஒரு சிறு பண்ணைக் குட்டை வெட்ட வேண்டும்.

11) மழை நீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

12) பசுந்தாள் உரம், மக்கிய உரம், சக்கை பூண்டு போட்டு உழுதல் அவசியம்.

13) ஆடு, மாடு கிடை போட வேண்டும்.

14) ஒரு சொட்டு நீர் கூட வீணாக்க கூடாது. தேவையின்றி மோட்டார் ஓட கூடாது.

15) நாம் போடும் பயிர் வகைகளுக்கு ஏற்ற அடியுரம் போட வேண்டும்.

16) ஊடு பயிர் நல்லது.

(17) வேர் முடிச்சு உள்ள தாவரம் பயிரிட்டால் மண்ணில் போட்டு மடக்கி உழ வேண்டும்.

18) பூச்சிகளுக்கு பொறி, மூலிகை பூச்சி விரட்டி பயன்படுத்த வேண்டும்.

19) அந்தந்த ஊரில் இடுபொருள் போட வேண்டும்.

20) ஆண்டுக்கு ஒரு முறை வண்டல் மணல், வேப்பம் புண்ணாக்கு போட்டு உழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *