அருள்மிகு திருவரங்க நாதர் திருக்கோவில், ஆதிதிருவரங்கம், விழுப்புரம் மாவட்டம்
திருச்சி ஸ்ரீரங்கநாதரை விட அளவில் பெரியவராக 28 அடிநீளத்தில் மகாவிஷ்ணு படுத்த சயன கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.
தேவலோக தச்சன் விஸ்வகர்மா இதை வடிவமைத்துள்ளார். 28 அடி நீளத்தில் பெரிய பெருமாள் இருக்கிறார். ரங்கநாயகி தாயார், அனுமனுக்கு, தனித்தனியே சன்னதிகள் உள்ளன.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தாங்கள் கேட்டுக்கொண்ட கொண்ட விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம். இவரை வழிபட இழந்தது மீட்டுத் தருபவராகவும் குழந்தை பேறு அளிப்பதிலும் வரப்பிரசாதியாகவும் திகழ்கிறார்.
சுமுகன் என்ற அசுரன் தேவர்களை வெல்வதற்காக வேதங்களை அபகரித்தான் தேவர்களும் முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு மகா விஷ்ணுவிடம் முறையிட்டு வேதங்களை மீட்டுத் தருமாறு வேண்டிக் கொண்டனர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற நாராயணன் சமுத்திரத்தில் ஒளிந்து கொண்டிருந்த சோ முகனே அழித்து வேதங்களை மீட்டுக் கொண்டுவந்து கொடுத்து இத்தலத்தில் பிரம்மனுக்கு உபதேசமும் செய்தார்.
சுருதகீர்த்தி என்ற மன்னனுக்கு எல்லா செல்வங்கள் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லாததால் மிகவும் கவலை கொண்டான் நாரதரை அறிவுரையின் பேரில் இந்த மன்னன் இந்த தளத்திற்கு வந்து தனது மனைவியுடன் வேண்டிக்கொண்டு பெருமாளின் அருளால் நான்கு குமாரர்களை பெற்று பாக்கியம் பெற்றனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சி கொண்டனர். சீதளத்தை ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்ய இயலவில்லை .
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ஒரு உருவாதல் எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களையும் ஏழை ஏதலன் எனத் தொடங்கும் பத்துப் பாசுரங்களில் இந்த திருத்தல பெருமாளே மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதற்கு கோயில் கல்வெட்டுகளிலும் பாத்திரங்களிலும் சான்றுகள் உள்ளது. வைணவ ஆச்சாரியார் வேதாந்த தேசிகனும் வாசகத்தில் இப்பெருமான் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் என்றும் நூல்கள் தெரிவிக்கின்றது.
நட்சத்திரன் என்பவருக்கு இருபத்தி இரண்டு மகள்கள். தேவர்களில் ஒருவரான சந்திரனின் பேரழகில் மயங்கிய அவர்கள் தங்களின் கணவராக ஏற்றனர். ஆனால் அவர்களின் கார்த்திகை ரோகிணி என்னும் இரு மனைவியரை மட்டுமே நேசித்த சந்திரன் மற்றவர்களை புறக்கணித்தான். அழகன் என்ற கர்வமும் கொண்ட சந்திரனை பழிதீர்க்க உன் அழகு போகட்டும் என மற்ற 25 பேரும் சபித்தனர். இந்த தலத்தில் வந்து மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தார் சந்திரன். அதன்பின்னர் சாபம் நீங்கப் பெற்றதாக வரலாறு.
சந்திரனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் சந்திர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது.இந்த திருக்கோவில் இந்த திருக்கோவிலில் முக்கிய விழாக்களாக புரட்டாசி சனிக்கிழமைகள் பவுர்ணமி வைகுண்ட ஏகாதசி மற்றும் தமிழ்வருடப்பிறப்பு ஆங்கில வருடப்பிறப்பு மற்ற விழாக்கள் ஆகும். காலை 6 மணி முதல் இரவு ஏழு மணி வரைக்கும் இந்த திருத்தலம் திருக்கோவில் திறந்திருக்கிறது.
முக்கியமான விழாக்களாக புரட்டாசி சனிக்கிழமை பவுர்ணமி வைகுண்ட ஏகாதசி சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும். ஆதிதிருவரங்கம் பெருமாள் திருக்கோவில், ஆதிதிருவரங்கம் 605 802, விழுப்புரம் மாவட்டம். தொலைபேசி எண்.04153 293677.