செய்திகள்

விழுப்புரத்தில் முருகன் பட்டு நெசவாளர் கூட்டுறவு விற்பனை நிலையம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

Spread the love

விழுப்புரம், ஆக.23-

விழுப்புரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் முருகன் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 6–வது நேரடி கிளை விற்பனை நிலையத்தை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் 3.19 லட்சம் கைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் 1,139 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கீழ் 2.46 லட்சம் கைத்தறிகள் இயங்குகிறது.மொத்தமாக 1,139 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் 1,053 பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களாகவும், 86 பட்டு கைத்தறி நெசவாளர் சங்கங்களாகவும் செயல்படுகிறது.

இதில், காஞ்சிபுரம் முருகன் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1957–ம் ஆண்டு பிப்ரவரி 2–ம் தேதி பதிவு செய்யப்பட்டு, அதே ஆண்டு மார்ச் மாதம் முதல் செயல்படுகிறது. சங்கத்தின் 665 நெசவாளர்களுக்கு, தொடர்ந்து தொழில் வழங்கி, மாதம் சராசரி 600 பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு 75 லட்சம் ரூபாய் அளவில் விற்பனை செய்யப்படுகிறது. சங்கத்திற்கு காஞ்சிபுரம், காரைக்குடி, மதுரை மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் நேரடி கிளை விற்பனை நிலையங்கள் உள்ளன.

இதன் 6–வது நேரடி கிளை விற்பனை நிலையம் திறப்பு விழா விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது. கிளையை, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வைத்தார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் கருணாகரன், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் தமிழரசி, தலைவர் வள்ளி விநாயகம், துணை தலைவர் ஜெயந்தி சோமசுந்தரம், நிர்வாகக்குழு இயக்குநர்கள் ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, முத்தால், இளங்கோவன், கீதா சண்முகானந்தம், கடலூர் உதவி இயக்குநர் காமராஜ், அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத் தலைவர் ராமதாஸ், இணைச் செயலர் குமரன், ஜெயலலிதா பேரவை சேகர், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *