செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்

விருதுநகர், ஜூலை 8–

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் 19–ந் தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 277 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளை (9–ந் தேதி) முதல் 19–ந் தேதி வரை பட்டாசு ஆலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *