போஸ்டர் செய்தி

விஜயகாந்த்துடன் டாக்டர் ராமதாஸ் சந்­திப்­பு

சென்னை, மார்.14–

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று காலை அவரது இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார்.

பார்லிமெண்ட் தேர்தலுக்காக அண்ணா தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது.

இந்த மெகா கூட்டணியில் பாரதீய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, த.மா.கா., புதுச்­சேரி என்.ஆர். காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் இடம் பெற்றுள்ளன.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதாவுக்கு 5 இடங்களும், பா.ம.க.வுக்கு 7 இடங்களும், தே.மு.தி.க.வுக்கு 4 இடங்களும், என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது.

எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளரும், தலைவருமான விஜயகாந்தை பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவ­ர­து வீட்டில் சந்தித்து பேசினார். அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

விஜயகாந்த்தை சந்தித்து விட்டு வெளியே வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில் விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன் என்றார். தொகு­திகள் பற்றி பேசி­னீர்­களா என்று கேட்­ட­தற்கு அது­பற்றி பேச­வில்லை என்று ராமதாஸ் கூறி­னார்.

தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகளில் பா.ம.க. கண்டிப்பாக பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக – பாமக கூட்டணியில் இருந்த போது கூட ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு நிகழவில்லை. இந்நிலையில் முதல்முறையாக விஜயகாந்தை, ராமதாஸ் தற்போதுதான் சந்தித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *