செய்திகள்

வாலாஜாபாத் ஒன்றிய பகுதியில் 2000 குடும்பங்களுக்கு ரூ.6 லட்சத்தில் அரிசி மூட்டை–காய்கறிகள்

வாலாஜாபாத் ஒன்றிய பகுதியில் 2000 குடும்பங்களுக்கு

 ரூ.6 லட்சத்தில் அரிசி மூட்டை–காய்கறிகள்:

மாவட்ட செயலவாளர் பா.கணேசன் வழங்கினார்

காஞ்சீபுரம், ஜூன் 3–

தமிழகம் முழுவதும் ஊரடங்கு தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அறிவுரையின் பேரில், கழக நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மையம்பேட்டை, கருக்குபேட்டை, வன்னியபேட்டை, ஏகனாம்பேட்டை, நாயக்கன்பேட்டை, புதுப்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 2000 குடும்பத்தினருக்கு அரிசி மூட்டை, காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் கலந்து கொண்டு தனது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நிவாரண உதவிகளை கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக சென்று வழங்கினார். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவிய தமிழக அரசுக்கும், வாலாஜாபாத் பா.கணேசனுக்கும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட மக்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் அக்ரி கே.நாகராஜன், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் தென்னேரி என்.எம்.வரதராஜூலு, மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் நாயக்கன்குப்பம் என்.ஆர்.பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஓ.வி.ரவி, டி.சி.துரை, எஸ். வெள்ளேரியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *