சிறுகதை

வாட்ஸ்அப் – ராஜா செல்லமுத்து

முன்பெல்லாம் ஒரு செய்தியை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்கு நூலகம் செல்ல வேண்டும். அதன் சம்பந்தமான புத்தகங்களைப் படிக்க வேண்டும் குறிப்புகள் எடுக்க வேண்டும் .இப்படி நிறைய விஷயங்கள் சேகரித்தால் தான் நினைத்த ஒரு பொருளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் அந்த நிலையெல்லாம் இப்போது மாறி செல்போன் என்ற அறிவியல் சாதனத்தைக் அத்தனையும் அடங்கிக் கிடக்கிறது. ஒரு செல்போன் இருந்தால் போதும் உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் செய்தியையும் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

செல்வன் செல்போனை வைத்துக்கொண்டு அறிவியல் சம்பந்தமான செய்திகளையும் நாட்டுநடப்பு செய்திகளையும் விலாவாரியாக தன்னுடைய வாட்ஸப்பில் எல்லோருக்கும் பதிவு செய்து கொண்டிருப்பான்.

இது அவனுக்கு பொழுதுபோக்கு இல்லை என்றாலும் பொது அறிவை மக்களிடமும் நண்பர்களிடமும் கொண்டு போய் சேர்த்த திருப்தி அவனுக்கு இருந்தது. அனு தினமும் ஏதாவது ஒரு செய்தி எடுத்து தன்னுடைய கணக்கில் உள்ள அத்தனை வாட்ஸ்அப் நம்பர்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டு தான் காலை உணவை உண்பான். அது அவனுக்கு ஒரு பழக்க தோஷம் ஆகிவிட்டது. அதைப் படித்து நிறைய பேர் கமெண்ட் போடுவார்கள். ஒரு சிலர் அதை கடந்து சென்று விடுவார்கள்.

செல்வன் போடும் பதிவுகளை அலட்சியம் செய்பவர்களும் உண்டு. அலட்சியம் செய்யப்படும் விஷயங்களை ஒருபோதும் தன் மூளையில் அமர்த்தி அதைப்பற்றி சிந்திக்க மாட்டான். அலட்சியம் செய்பவர்கள் எழுதும் வார்த்தையில் மூழ்கி அதையே நினைத்துக்கொண்டு கிடக்க மாட்டான். இரண்டையும் இரண்டு விதமாக பார்ப்பதில் செல்வனுக்கு அலாதி விருப்பம்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் அவனது வாட்ஸ்அப் வாழ்க்கையில் நிறைய பெரிய மனிதர்களும் அவருடன் இருந்தார்கள். அவன் பெரிய மனிதர்கள் சின்ன மனிதர்கள் என்று எதையும் பார்க்காமல் ஐந்து நபர் ஐந்து நபர் என்ற கணக்கின் வீதம் தன்னுடைய இணைப்பில் இருக்கும் அத்தனை பேர்களுக்கும் அந்த வாட்ஸ்அப் செய்தியை அனுப்பவும் சமூகத்தில் இருக்கும் ஒரு பெரிய மனிதர் அவனின் வாட்ஸ்அப் செய்திகளை படித்து விட்டு அவனுக்கு பாராட்டுக் கடிதம் கொடுப்பார்.

ஆனால் ஒரு சில மனிதர்கள் செல்வனின் நம்பரை பிளாக் செய்து விடுவார்கள். இது செல்வனுக்கு புரியாமல் இருந்தது.

ஏன் இப்படி செய்கிறார்கள்? இன்னைக்கு வாழ்க்கையோட உசந்த நிலையில் இருக்கிறவங்க எல்லாம் அவங்களா முன்னேறி வந்ததில்லை. அவர்களுடைய வளர்ச்சிக்கு மத்தவங்க உதவியா இருந்து உற்சாகப்படுத்தி இருக்காங்க . வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க ; பெரிய பெரிய மனிதர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறாங்க.

அப்படி இருக்கும்போது ஏன்? இவங்க இன்னொருத்தனை இன்னொருத்தர் உடைய திறமையை அதிகரிக்க மாட்டேங்கிறாங்க. காலையில் எழுந்து நல்ல செய்திகளை தான் நம்ம அனுப்புறோம் . அதுக்கே இவ்வளவு பொறாமை போட்டியா? என்று செல்வன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

செல்வனின் பதிவுகளுக்கு எல்லாம் சமூகத்தில் பெற இருக்கும் அந்த உயர்ந்த மனிதர் கமெண்ட் போட்டுக் கொண்டே இருப்பார் .இதற்கு செல்வன் பதிலும் போடுவான். அதே இடத்தில் ஒரு பெரிய மனிதர் செல்வனின் நம்பரை பிளாக் செய்து விட்டார்.

என்ன இது? எப்ப பார்த்தாலும் எதையாவது அனுப்பி இருக்கிறானே ? அவர் பிளாக் செய்திருக்கலாம்.

நாட்கள் கடந்தன. செல்வன் தன் நம்பரை பிளாக் செய்தவரை ஒரு கூட்டத்தில் செல்வனுக்கு சந்திக்க வேண்டியதாயிற்று. அது ஒரு சுய முன்னேற்றம் கலந்த ஒரு கருத்தரங்கம். அப்போது செல்வனின் வாட்ஸ் அப்பை பிளாக் செய்த மனிதர் பேசினார்.

இந்த சமூகத்தில் நிறைய இடங்களில் திறமை கொட்டிக்கிடக்கிறது. அவர்களை எல்லாம் ஒரு வெளிப்படுத்தினால் அவர்கள் இன்னும் இன்னும் என்று உயரத்தில் ஏறுவார்கள். அதை செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இந்த இளைஞர்கள் எல்லாம் வருங்காலத்தில் இந்தியாவினுடைய தூணாக இருப்பார்கள். அதற்கு நாங்கள் துணையாக இருப்போம் என்று நிமிடத்திற்கு நிமிடம் இளைஞர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த செல்வனுக்கு சுருக்கென்றது.

ஒரு வாட்ஸ் அப்புக்கு பதில் சொல்ல முடியல. நல்லா இரண்டு வார்த்தைகள் பாராட்டி எழுதத் தெரியல. நம்பர பிளாக் செஞ்சுட்டிங்க. அதை விட்டுவிட்டு இல்லாத ஒருத்தனுக்கு இல்லாத ஒருத்தன் வேலை வாங்கித் தருவதாகவும் பெரிய இடத்தில் உட்காரத் தான் பேசிட்டு இருக்கிங்க.

என்ன ஒரு பித்தலாட்டம் . இவனுங்க தான் சமூகத்தில் பெரிய மனுஷனாக அங்கீகரிக்கப்படுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது,

அந்த இன்னொரு பெரிய மனிதர் செல்வனுக்கு வாழ்த்துக் கடிதத்தை அனுப்பி இருந்தார்.

இப்படியும் மனிதர்கள். அப்படியும் மனிதர்கள் என்று தனக்குத் தானே நினைத்துப் சிரித்துக்கொண்டான்.

வாட்ஸ் அப்பை பிளாக் செய்த மனிதர் மேடையில் அளந்து விட்டுக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *