செய்திகள்

வாக்குப்பதிவு நாள் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஒருநாள் விடுப்பு

சென்னை, ஏப். 11–

வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள், ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு துறையை சேர்ந்தவர்களும் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

அரசு விடுமுறைக்கு மாற்று

வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. ஆனால் அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், அவர்கள் இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விடுமுறை நாளன்று பணியாற்றியதற்கு ஈடு செய்யும் விதமாக, ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளாம், அந்த விடுப்பை இந்த மாதத்திற்குள் எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *