செய்திகள்

வாகனங்களுக்கு 3 மாத இலவச பரிசோதனை

கோவை, ஏப். 15

இந்தியாவின் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், ஏப்ரல் 1 முதல் ஜுன் 30 வரையிலான மூன்று மாத காலத்துக்கு இலவச என்ஜின் ஆரோக்கிய பரிசோதனை சேவை முகாமை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு என்ஜின் மற்றும் வாகன பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்து கற்பிப்பதை இந்த சேவை முகாம் இலக்காகக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து வர்த்தக வாடிக்கையாளர்களுக்காகவும் இந்த சேவை முகாம் 1500 க்கும் மேற்பட்ட டீலர் மற்றும் டாடா அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையங்களில் வழங்கப்படும்.

இம்முன்முயற்சிக்கு, கியூமின்ஸ், பாஷ், லூகாஸ், டெல்பி, ப்ளீட் கார்டு, எஸ்இஜி, டர்போ எனர்ஜி, டாடா டோயோ, பேன்கோ மற்றம் ஆல்கிராப்ட் ஆகிய மதிப்பு மிக்க நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதன் வழியாக தங்களது ஆதரவு தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *