செய்திகள்

வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம்

காஞ்சீபுரம்,டிச.3-–

காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில் கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம் காந்திரோட்டில் உலக பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பெங்களூரை சேர்ந்த ராகவேஸ்வர பாரதி சுவாமிகளின் வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இக்கோவிலுக்கு இவர் வந்து வழக்கறுத்தீஸ்வரை மனமுறுகி வேண்டி நெய்தீபம் போட்டார். அதனால் இவரது வழக்குகள் தவிடுபொடியாகின. அதையொட்டி. ராகவேஸ்வர பாரதி சுவாமிகள் இக்கோவிலில் உள்ள 47 அடி உயரமுள்ள கொடிமரத்திற்கு, மேல் செப்பு கவசம் பொருத்த சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் செய்ய முடிவு செய்தார். அதையொட்டி. இப்போது இக்கோவிலில் உள்ள கொடிமரத்திற்கு செப்பு கவசம் பொருத்தும் பணி முடிவடைந்தது.

இதையொட்டி இன்று காலை கொடிமரத்திற்கு கும்பாபிகேஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர் நாகராஜ் குருக்கள் கொடிமரத்திற்கு ஊற்றி கற்பூர தீபாராதனை காட்டினார். அப்போது திரண்டு இருந்த பக்தர்கள் ‘‘வழக்கறுத்தீஸ்வராயா நமகஹ… ஓம் நமச்சிவாயா… என்ற பக்தி கரகோஷம் எழுப்பினர். முன்னதாக வழக்கறுத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வண்ண வண்ண மலர்களால் பக்தர்களுக்கு வழக்கறுத்தீஸ்வரர் அருள்பாலித்தார்.

இந்த கும்பாபிஷேகத்தில், மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், கழக அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், மா.வெள்ளைச்சாமி, சோ.செந்தில்குமார், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் காஞ்சீ பன்னீர்செல்வம், பூக்கடை ஆர்.டி.சேகர், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வீ.வள்ளிநாயகம், அத்திவாக்கம் செ.ரமேஷ், உத்திரமேரூர் கே.ஆர்.தருமன், மானம்பதி வில்வபதி,என்.பி.ஸ்டாலின், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் எ.செல்வராஜ், எ.கேசவன், யுவராஜ் என்கிற துரை, கே.வாசு, ராதாகிருஷ்ணன், பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் பாலாஜி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பி.ஏ.ராஜசிம்மன், கவிஞர்கள் கூரம் துரை, எஸ்.முருகவேள், பொதுப்பணித்துறை மோகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில் கொடிமரத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் செப்பு கவசம் செய்து கொடுத்த உபயதாரர் பெங்களூரை சேர்ந்த ராகவேஸ்வர பாரதிக்கு கோவில் குருக்கள் நாகராஜ் பொன்னாடை அணிவித்து கோவில் பிரசாதங்களை வழங்கினார்.

பிறகு, வந்திருந்த பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி, புளியோதரை, ஆகியவற்றை மாவட்ட கழக செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வை.முருகேசன், கோவில் மேலாளர் ந.தியாகராஜன், திருக்கோவில் குருக்கள் மா.சு.நாகராஜ குருக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *