செய்திகள்

வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்

திருவள்ளூர், ஜூன் 8–

திருவள்ளூரில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளுர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. இதில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாற்றம் (முழுபுலம் உட்பிரிவு) தொடர்பாக 134 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பாக 8 மனுக்களும், வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி 18 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 97 மனுக்களும், சாதி சான்றிதழ் தொடர்பாக 4 மனுக்களும் மற்றும் இதர மனுக்களாக 15-ம் என வருவாய்த்துறை சார்ந்து 276 மனுக்களும், இதர துறைச்சார்ந்து 26 மனுக்களும் ஆக மொத்தம் 302 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 17 மனுக்கள் ஏற்கப்பட்டு, மீதமுள்ள 285 மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின்னர் தீர்வு காணப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

பின்னர், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்கும் 10 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் நகல் உள்ளிட்டவைகளையும், இரண்டு பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்களையும் ஆகியவற்றை வழங்கினார்,

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் வட்டாட்சியர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (நீதியியல்) மதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *