வாழ்வியல்

வசம்பு – அதிமதுரப் பொடி சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமடையும்

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். ஒரு சிறு குத்தியில் குத்தி லேசான தீயில் வசம்பை நன்கு கரியாகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பின்னர் குழந்தைக்குப் பயன்படுத்தும் எண்ணெயில் குழைத்து வயிற்றுப் பகுதியில் தடவலாம். பெரியவர்களும் கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம். மிகவும் குளிர்ச்சியான உடல் கொண்டவர்களாக இருந்தால் தேங்காய் எண்ணெயும் சூட்டு உடலாக இருந்தால் விளக்கெண்ணெயும் பயன்படுத்துவது நல்லது.

வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும். பொதுவாக குழந்தைகள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்ணும் உணவு செரிப்பதற்கு வெகுநேரம் பிடிக்கும். அதனால் மருந்துகள் கொடுப்பதற்கு முன்னால் வயிறு முட்ட அவர்களுக்கு பாலோ வேறு உணவோ கொடுக்காமல் அரை வயிறு உணவு கொடுத்தால் போதுமானது.

வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும்.

அதிமதுரப் பொடியை பாலில் கலந்தும் குடித்து வரலாம். அவ்வாறு குடிக்கும் பொழுது அதிலேயே அதிக அளவிலான இனிப்பு இருப்பதால் தேனோ அல்லது வேறு இனிப்புகளோ பயன்படுத்தத் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *