சிறுகதை

லம்போர்கினி – ராஜா செல்லமுத்து

வாழ்க்கை வசதிகளைப் பெருக்குகிறது. வசதிகளற்ற வாழ்க்கை அலுத்துப் போகிறது. வசதியுள்ள வாழ்க்கை ரசிக்க வைக்கிறது.

அந்த வகையில் ராஜ் ஒரு உயர் ரக கார் வாங்கினான். அது உனது ஆசை என்றாலும் அந்தக் காரின் வடிவமைப்பு அப்படி. லம்போர்கினி என்ற பெயருடைய அந்த கார் விமானத்திலிருந்து இறங்கி கப்பலில் வந்து தரையில் தவழ்ந்தது.

அந்த லம்போர்கினி அது நடமாடும் சொர்க்கம் என்று ராஜ் சொல்லுவான். அப்படித்தான் அந்த கார் இருந்தது.

அந்தக் காரை வாங்கியதிலிருந்து அதை ஒரு நாளைக்கு நூறு முறை துடைப்பதும் ஆயிரம் முறை தொட்டு கும்பிடுவதுமாய் இருந்தான் ராஜ்.

அடிப்படையில் ஒரு பணக்கார வீட்டுப் பையனாக இருந்தாலும் லம்போர்கினி அவன் கனவு, லட்சியம்.

ஏழைகளாக இருப்பவர்கள் எல்லாம் போட்டி, பொறாமை அடுத்தவர்களுடன் சமப்படுத்தி பார்ப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு இருக்காது. பசிக்கும் வயிற்றுக்கு சோறு கிடைப்பது கொஞ்சம் பணம் இருப்பதுமே அவர்களுக்கு பெருமிதம் என்று இருக்கும்.

ஆனால் பணக்காரர்களின் உடைய சமநிலை என்பது ஒரு பணக்காரன் ஆயிரம் கோடி வைத்திருந்தால் அதை விட ஒரு கோடி அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் இன்னொரு பணக்காரன் நினைப்பான். இதுதான் பணக்காரர்களின் சமநிலை.

அதுபோலதான் ராஜு லம்போர்கினி வீட்டில் வாங்கி வைத்ததில் இருந்து இந்த மாதிரி கார் நம் ஏரியாவில் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அந்த தெருவில் உள்ளவர்கள் என்று ராஜுவைப் புகழ்ந்தார்கள்.

ஆனால் அது என்ன ஒரு பிரச்சனை என்றால் லம்போர்கினி காரின் பேனட் ரொம்பவும் தாழ்வாக இருக்கும். அதை சராசரி தார்ச்சாலையில் ஓட்டிப் போக முடியாது.

வெளி நாடுகளில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தார் சாலைகளில் தான் அந்தக் கார் ஓடும்.

நமது தமிழ்நாட்டில் குண்டும் குழியுமாக மேடும் பள்ளமுமாக ஸ்பீடு பிரேக் என்று சொல்லப்படும் தடைகளை மலைகளைக் கடந்து தான் வாகனங்கள் கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

இந்த தார்சாலையில் லம்பார்கினி வசப்படவில்லை. காரில் தார்ச்சாலையில் காரை ஓட்டுவது. ஒருவித பயமாக இருந்தது. லம்பாேர்கினி அதனுடைய பேனட் தட்டிக் கொண்டே போகும்.

அதனால் ராஜு ஒரு முடிவெடுத்தான். நம்மிடம் வரி வாங்கிக்கொண்டு எப்படி இவர்கள் தார் சாலையை போடாமல் இருக்கலாம் என்று தன்னுடைய லம்பாேர்கினிக்காகவே அரசாங்க அதிகாரிகளிடம் முறையிட்டான்.

ரோடு சரி இல்லை. ரோடு அப்புறம் மாத்துங்க. என்னுடைய கார் ஓட்ட முடியல. அதனால நீங்க எங்க வீட்டு வரைக்கும் இருக்கிற ராேடு போட்டு தான் ஆக வேண்டும் என்று சொன்னான் ராஜ்.

அவனை ஏளனமாகப் பார்த்தார்கள் அந்த அரசாங்க ஊழியர்கள். இவனுக்கு கிறுக்கு ஏதும் பிடித்ததா? என்று பேசிக் கொண்டார்கள்.

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ஜாம குடை பிடிப்பான் அப்படிங்கிறது மாதிரிதான். இந்த ஆளோட பேச்சு இருக்கு. இது எதில் போய் முடிய போகுதுனு தெரியல?

கார் வைத்திருக்கிறது; ஆடம்பரமாய் இருக்கிறதெல்லாம் மனிதனுடைய தேவைதான். ஆனால் இப்ப தேவையே வாழ்க்கைய்ப் போச்சு ஆடம்பரமே அன்றாட வாழ்க்கையாய் ஆயிடுச்சு என்று சிலர் வருத்தப்பட்டு கொண்டார்கள். லம்பாேர்கினியை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் நீ ஒரு காரிலேயே பிறந்து வளர்ந்த ஆள். இதுக்கு ஒரு நாள் விடிவு காண வரும் என்று பேசிக் கொண்டார்கள்.

லம்பாேர்கினி எல்லோரும் பொறாமையாக பேசுகிறார்கள் என்று திருஷ்டி சுற்றி போட்டு கருப்பு கயிறு கட்டி எலுமிச்சம்பழத்தை லம்பாேர்கினியில் கட்டிவிட்டான்.

நாட்கள் நகர்ந்தன.

கடும் மழை, பெரும் புயல், பெரும் வெள்ளம் சூழ்ந்தது. மொத்த நகரமும் தண்ணியில் மூழ்கியபோது லம்போர்கினி தண்ணியில் மிதந்து கொண்டு சென்றது.

அதோடு உடைஞ்சகார்கள் பிளாஸ்டிக் குப்பைகள் என்றும் இருந்தன.

பார்த்தியா இதுதான்யா லம்போர்கினியுடைய லட்சணம். மனித வாழ்க்கைதான் நிரந்தரம். ஆடம்பரம் வரலாம். இந்த ராஜ் லம்பாேர்கினி எப்படி போகுது பாருங்க என்று சொன்னதோடு, ஒரு திசையை நீட்டிக் காட்டினான்.

காராவது அப்படி போகுது. ராஜ் பாருங்க என்றபோது, தப்பித்து உயிர் பிழைத்தோம் என்று அவன் வீட்டிலிருந்து ஒரு அண்டாவில் அவனை வைத்து லாவகமாக சிலர் இழுத்து வந்தார்கள்.

ஐயோ என்ன காப்பாத்துங்க. நான் செத்துருவேன் போல இருக்கு என்று பதறித் துடித்தான்.

அப்போது அவர்கள் சொன்னார்கள். பார்த்தியா லம்பாேர்கினி ஒரு பக்கம் போவுது; ராஜ் ஒரு பக்கம் போறான்; வாழ்க்கை என்பது நிரந்தரம் அல்ல.

மனிதனின் வசதி வாய்ப்புகளை நிரந்தரமல்ல; எதைக் கொண்டு வந்தாலும் இதை சேர்த்துக் கொண்டாலும் அதை வைத்து ஆடக் கூடாது. இறைவன் ஒருநாள் அதை எல்லாம் தட்டி விட்டு விடுவான்.

அதற்கு இந்த லம்போர்கினி உதாரணம் என்று சொன்னார்கள்.

தண்ணீர் போன போக்கில், அந்த லம்போர்கினி தரையில் ஓடாத தார் சாலையை சரி செய்யச் சொன்ன லம்போர்கினி குப்பை கூளங்கள் தண்ணீர் போகும் திசையில் அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

உயிர் பிழைத்தால் போதும் என்று அண்டாவில் உட்கார்ந்த ராஜ்வை சிலர் இழுத்துச் சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *