டெல்லி, பிப். 7–
வாட்ஸ் ஆப் எண் 8750001323 மூலம் ஆன்லைன் உணவு விநியோகத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
ரெயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 8750001323 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்தால் இருக்கைக்கே உணவு வந்துவிடும். முதற்கட்டமாக குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளியிடம் உள்ள வரவேற்பை பொறுத்து மேலும் விரிவுபடுத்தப்படும் என ஐஆசிடிசி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், இந்திய ரயில்வேயின் பொதுத்தறை நிறுவனமான, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) உருவாக்கிய இணையதளமான www.catering.irctc.co.in மற்றும் அதன் இ-கேட்டரிங் செயலியான Food on Track மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தொடங்கியுள்ளது.
இந்திய ரெயில்வே தனது இ-கேட்டரிங் சேவைகளை வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டதாக மாற்றும் நோக்கில், ரயில்வே பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்ய வாட்ஸ்ஆப் தொடர்பைத் தொடங்கியுள்ளது. இதற்காக வாட்ஸ்அப் எண் +91-8750001323 தொடங்கப்பட்டுள்ளது.
2 நிலைகளில் செயல்பாடு
தொடக்கத்தில், வாட்ஸ்அப் கம்யூனிகேஷன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளை 2 நிலைகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்வு செய்வதற்காக வாடிக்கையாளர் முன்பதிவு செய்யும் இ-டிக்கெட்டுக்கு வணிக வாட்ஸ்அப் எண் செய்தியை அனுப்பும்.
இந்த விருப்பத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவை ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் இணையதளம் மூலம், செல்லும் நிலையங்களில் நேரடியாகக் கிடைக்கும். அடுத்த கட்ட சேவைகளில், வாடிக்கையாளருக்கான இருவழி தகவல் தொடர்பு தளமாக WhatsApp எண் இயக்கப்படும். இதில் செயற்கை நுண்ணறிவு பவர் சாட்போட் பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகளின் அனைத்து வினவல்களையும் கையாளும் மற்றும் அவர்களுக்கான உணவையும் முன்பதிவு செய்யும்.
முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட ரெயில்கள் மற்றும் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளுக்காக வாட்ஸ்அப் தொடர்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், ரெயில்வே மற்ற ரயில்களிலும் இதை செயல்படுத்தும். இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி மூலம் இயக்கப்பட்ட இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.