செய்திகள்

ரெம்டெசிவிர் கொரோனாவைக் குணப்படுத்தாது: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி

சென்னை, மே 16–

ரெம்டெசிவிர் மருந்து, கொரோனாவை குணப்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. முதல் பரவலின்போதே, ரெம்டெசிவிர் மருந்துக்குப் பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. அதற்குப் பின் அம்மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது, ஆய்வு முடிவிலும் அது பற்றி கூறப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் தனது ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா மருந்துகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஜூலை 2020க்குப் பிறகு புதுப்பிக்கவே இல்லை. இதனால் மருத்துவர்களுக்கு ரெம்டெசிவர் பற்றிய புரிதல் இல்லை. எனவே இது அந்த அமைச்சகத்தின் குறைபாடுதான் என மருத்துவர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ரெம்டெசிவிர் மருந்து ,கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் ஒன்றாக பயன்படுமே தவிர, கொரோனாவை குணப்படுத்த உதவாது என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *