போஸ்டர் செய்தி

ரூ.15 கோடியே 66 லட்சம் செலவில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக் கட்டடங்கள்; கூடுதல் வகுப்பறைகள்

சென்னை, அக்.11–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்காக 14 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 விடுதிக் கட்டடங்கள் மற்றும் 7 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்களையும் திறந்து வைத்தார்.

அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்விகற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லாக் கல்வி, மதியஉணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்வி உபகரணங்கள் மற்றும் சீருடை, கல்வி ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்றநலத் திட்டங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அனைத்து வசதிகளுடன்….

அந்தவகையில், சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிமாணவர் விடுதிக் கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார். இந்த விடுதிக் கட்டடமானது, 5,230 சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் முதல்தளத்துடன், 50 மாணவர்கள் தங்கும் வசதியுடன், உணவுக்கூடம், சமையலறை, குளியல் மற்றும் கழிவறைக்கூடம், சூரிய மின்சக்தி வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம் – நீராவி, புதுக்கோட்டைமாவட்டம் – மறமடக்கி மற்றும் கீரனூர், கடலூர் மாவட்டம் – சேமக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – கல்லூரணிக்காடு, சிவகங்கை மாவட்டம் – சிவகங்கை ஆகிய இடங்களில் 6 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 6 விடுதிக் கட்டடங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – பொலம்பாக்கம், புதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டை, விழுப்புரம்மாவட்டம் – எலவனாசூர்கோட்டை ஆகிய இடங்களில் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவியருக்கான 3 விடுதிக் கட்டடங்கள்;

கூடுதல் வகுப்பறைகள்

அரியலூர் மாவட்டம் – வெத்தியார்வெட்டு, அரசு ஆதிதிராவிடர் நலமேல்நிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம் – அபிஷேககட்டளை, அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் மாவட்டம் – தையூர் மற்றும் மீனம்பாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள், அனகாபுத்தூர் – அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, சேலம் மாவட்டம் – பகுடுப்பட்டு, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி மற்றும் சேலம் மாவட்டம் – சிக்கனம்பட்டி, அரசு ஆதிதிராவிடர் நலமேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 4 கோடியே 32லட்சம் ரூபாய்மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்கள்;

என மொத்தம் 15 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 10 விடுதிக் கட்டடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் க.வீ.முரளீதரன், தமிழ்நாடுஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சஜ்ஜன்சிங் சவான், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் டி. ரிட்டோசிரியாக், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *