செய்திகள்

ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு

Spread the love

ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலை அருகே உள்ள கிராம மக்களுக்கு

முக கவசம், பல சரக்கு, காய்கறி வழங்க ஏற்பாடு

ரூ.3 கோடிக்கு மருத்துவ கருவிகள் வாங்க உதவி

 

சென்னை, ஏப். 2–

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது சிமெண்ட் ஆலை உள்ள பகுதி கிராம மக்களுக்கும், தினசரி ஒப்பந்த ஊழியர்களுக்கும் முக கவசம், பல சரக்கு காய்கறி வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

உயிர்க்காக்கும் மருத்துவ கருவிகள் வாங்க ரூ.3 கோடி உதவி புரிந்துள்ளது. மாவட்ட கலெக்டருடன் ஒருங்கிணைந்து பொது மருத்துவத் துறைக்கு மாஸ்க், கிருமி நாசினி, காய்ச்சல் அறியும் கருவி, உடல் பாதுகாப்பு ஆடை, பிரச்சார போர்டு தயாரிப்புக்கும் ராம்கோ சிமெண்ட்ஸ் உதவியுள்ளது.

ராம்கோ சிமெண்ட்ஸ் தமிழ்நாட்டில் துலக்கப்பட்டி, அரியலூர், ஆந்திர மாநிலம் ஜெயந்திபுரம் ஆகிய ஊர்களில் தொழிற்சாலை கொண்டு சிமெண்ட்ஸ் உற்பத்தி செய்கிறது. தெலுங்கானா, கர்நாடகா, வங்காளம் ஒடிசா மாநிலங்களில் சர்ப்பு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இது அந்தந்த மாநில மாவட்ட கலெக்டர்களுடன் ஒருங்கிணைந்து சுத்தம், சுகாதாரம் ‘கொரோனா வைரஸ்’ தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன் பாதுகாப்பு ஊழியர்கள் ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சான்றிதழ் பெற்று பணிபுரிகின்றனர். ஊழியர்கள் 40 ஆயிரம் பேருக்கு முக கவசம் கைக் கழுவ சோப்பு வழங்கப்பட்டது.

ராம்கோ சிமெண்ட்ஸ் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

பிற மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் மற்றும் அவரது குடும்பத்திற்கு பல சரக்கு, காய்கறி இலவசமாக வழங்கப்பட்டது.

கர்நாடகா, வங்காள மாநில ஆலைகளுக்கு அருகே உள்ள தினசரி ஊழியருக்கு ரொக்க உதவி வழங்கப்பட்டது. இந்த பகுதி மருத்துவர், நர்ஸ்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டது.

ராம்கோ சார்பில் தமிழ்நாட்டில் தாமரைக்குளம் கடுக்கூர் ஆகிய பகுதிகளில் தனித்து வைக்கப்படும் மருத்துவ மையம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *