செய்திகள் நாடும் நடப்பும்

ரஷ்யாவை மீண்டும் உரசிப் பார்க்கும் நாட்டோ


ஆர் முத்துக்குமார்


உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ரஷ்ய தரப்பில் இருந்து ஏவுகணை தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று உக்ரைனிய உளவு அமைப்பு எச்சரித்திருக்கிறது. இதுவரை எந்த வித கோரத் தாக்குதலும் அரங்கேறவில்லை என்பதை மறந்து விடக்கூடாது. ரஷ்யா இதுவரை பெரிய தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. ஆனால் மெல்ல முன்னேறி வருகிறது அல்லவா?

இதற்கிடையில் உக்ரைனிய வெளிநாட்டுத் தலைவர்களின் வருகைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், படுரகசியமாக கியேவ் வந்து உக்ரைனிய அதிபரை சந்தித்து விட்டுச் சென்ற நிலையில் இரண்டு நாட்களில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கியவ் வந்திருக்கிறார்.

சமீபமாக இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உறுதிமொழிகளை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது.

லண்டனும் கியேவுக்கு இன்னும் கூடுதலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை தரத் தயாராகி விட்டது.

அமெரிக்கா தலைமையிலான ராணுவ கூட்டணியில் உள்ள எல்லா நாட்டோ உறுப்பினர்களும் ஏன் இந்த முடிவை எடுக்கிறார்கள் தெரியுமா?

உக்ரைனை போர்த் திறன்மிகு சக்தி வாய்ந்த நாடாக உயர்ந்தால் ரஷ்யா உடனே பயந்து போர் சங்கதிகளை விட்டுவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்… என்பதற்காகத்தான்.!

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பகிரங்கமாக “ரஷ்ய முன்னணியை பின்னுக்குத் தள்ளும் ராணுவத் தாக்குதலுக்கு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புவதற்கான வழியைத் திறப்பதற்கு வேய்ப்பு” என்று கூறி அவர் தனிப்பட்ட முறையில் “கடினமான முடிவுகளை” எடுக்குமாறு ஜெலென்ஸ்கிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஸெலென்ஸ்கியை ஊக்குவிக்கும் வகையில் ஜூலை மாதம் நாட்டோ உச்சிமாநாட்டில் “மேம்பட்ட ராணுவ உபகரணங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு” கியேவ் பெறும் திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் அறிவுறுத்த முடிவு செய்து இருப்பதாக அவரது ஊடக பேச்சுக்கள் அமைந்து இருக்கிறது.

நாட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் என்ன சொல்கிறார் தெரியுமா? ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் உக்ரைனுக்கு மேலும் தேவைப்படுகிறது, அதை மனதில் கொண்டு ராணுவ தளவாட உற்பத்தி திறன் கொண்ட நாடுகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை அதிகரித்தாக வேண்டும்,

மேலும் தயாராகும் தளவாடங்கள் சில மணி நேரத்தில் உக்ரைனில் ராணுவ தாக்குதலுக்கு அனுப்பபட வேண்டுமாம்!

இதை சும்மாவா பார்த்துக் கொண்டு இருக்கும் ரஷ்யா?

தூங்கிக் கொண்டு இருக்கும் குழந்தையை கிள்ளி எழுப்பி விட்டு ‘தொட்டிலை ஆட்டி தூங்க வைப்பது நாங்கள்தான்’ என்று கூறி பெருமைப்படுவது போல் அல்லவா கதை மாறிக் கொண்டு இருக்கிறது.

ரஷ்யாவை மீண்டும் உரசிப் பார்க்கும் நாட்டோ நாடுகள் – ‘‘போர் வேண்டாம் ; உலக அமைதி வேண்டும் ’’என்று நேசக்கரம் நீட்டுவதாகத் தெரியவில்லை.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் வெல்லப்போவது யார்?

கெட்ட போரிடும் ஆயுத வியாபாரிகளா? உலக அமைதியை விரும்பும் அன்பு உள்ளங்களா?

பொறுத்திருந்து பார்ப்போம் . காலம் பதில் சொல்லும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *