சினிமா செய்திகள்

‘‘ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் சினிமா உலகம் ஆரோக்கியமாக தலை தூக்கும்’’ : ஆர் வி உதயகுமார்

சென்னை, ஜன 24–

‘‘ரசிகர்களின் பயங்கரவாதம் ஒழிந்தால் தான் சினிமா உலகம் ஆரோக்கியமாக இருக்கும்’’ என்று பிரபல டைரக்டர் ஆர்வி உதயகுமார் தன் ஆதங்கத்தை வெளியிட்டார். இப்போது வரும் இளம் இயக்குனர்கள், திரைப்படங்களை உணர்வு ரீதியாக இயக்குவதில்லை என்று கூறிய அவர், மீண்டும் பாரதிராஜாவின் படங்கள், சின்ன கவுண்டர் போன்ற படங்கள் வந்தால் தான் உணர்வு ரீதியாக இருக்கும் இன்று தன் உணர்வை வெளிப்படுத்தினார்.

மலையாளத்தில் குறைந்த செலவில் எடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் மாளிகாபுரம். குடியரசு நாளில் திரைக்கு வரும் இப்படத்தின் இயக்குனர் விஷ்ணு சசி சங்கர்( ஏவிஎம் தயாரிக்க சூர்யா நடித்த பேரழகன் படத்தை இயக்கிய சசி சங்கரின் மகன்) உள்ளிட்ட கலைஞர்கள் சென்னையில் நிருபர்களை சந்தித்தனர்.

இப்படத்தில் ஆர் வி உதயகுமார்,யார் கண்ணன் பாடல்களை எழுதி இருக்கிறார்கள். .வசனத்தை பிரபாகர் எழுதியிருக்கிறார்.

வளர்ந்து வரும் இளம் வில்லன் நடிகர் சம்பத் ராம்.25 ஆண்டுகளாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருப்பவர். படத்தில் ஐயப்பனுக்கே வில்லனாகநடித்திருக்கிறார் அவர் சினிமாவில் பெரிய சுற்று வர வேண்டும் என்று வாழ்த்தினார் ஆர்.வி. உதயகுமார்.

குழந்தை நட்சத்திரம் தேவி நந்தா தான் கதையின் நாயகி. அவரின் முக பாவங்கள் தான் என்னை உணர்வு பூர்வமாக பாடல்களை எழுத வைத்தது என்று மகிழ்ச்சியோடும் கூறினார்.

கதையின் நாயகன் உன்னி முகுந்தன். இதுவரை 30 படங்களை மலையாளத்தில் கண்டிருந்தாலும் அவரது வாழ்க்கையில் ஓர் மைல் கல் இப்படம்.

6 முறை பார்த்தேன் கண் கலங்கினேன்

சம்பத்ராம் பேசுகையில், ஐயப்பன் தரிசனத்திற்காக புறப்படும் ஒரு பெண் குழந்தையை மையப்படுத்திய கதை இது என்பதால், படத்தில் அனைவரும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து முழுப் படத்தையும் முடித்தோம். இப்படத்தை ஆறு முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் என் கண் கலங்கியது என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

வசனகர்த்தா பிரபாகர் பேசுகையில், இப்படம் தனக்கு ஒரு புது அனுபவம். இறுதிவரை இதன் நாயகன் முகுந்தனை ஐயப்பனாகவே நினைக்க வைக்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்தது அதை சரியாக செய்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். சிவாஜி கணேசன், அவர் மகன் பிரபு, அவரது மகன் விக்ரம் பிரபு… என்று மூன்று தலைமுறையைத் தொடர்ந்து இன்னும் எழுதத் தான் பயணித்திருப்பதில் ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

சம்பத்ராமுக்கு தர்ம அடி தான்

மலையாளப் படத்தின் வசனகர்த்தா அபிலாஷ் உன்னி பேசுகையில், சம்பத் ராம் கேரளா பக்கம் வந்தால் நிச்சயம் அவருக்கு தர்ம அடி தான் விழும். படத்தில் அப்படி வெறுப்பை சம்பாதிக்கும் நடிப்பைகட காட்டி இருக்கிறார் என்று விமர்சித்துப் பாராட்டினார்.

தமிழில் வெளியிடும் விநியோக உரிமையை டிரைடன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவி பெற்று இருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *